Monday, April 1, 2013

என்ன சித்தப்பு.. சாப்டீங்களா?????

நடிகவேள் எம்.ஆர்.ராதா ஒரு படத்துல சொல்லுவாரு "வெள்ளக்காரன் நீராவில ரயில் எஞ்சின செஞ்சு ஊரெல்லாம் உடறான்.. நம்மாளுக என்னடான்னா அதே நீராவில புட்டு செஞ்சு உள்ள உடறான்..னு...

இது ஒரு நையாண்டியா இருந்தாலும்..சாப்பாட்டு விஷ‌ய‌த்துல‌ ந‌ம‌க்கு இருக்குற Creativity‌ யே த‌னி தான்..

தேவர் மகன் சிவாஜி ஸ்டைல்ல சொன்னா, பெருமாள் கோயில்ல சக்கரப்பொங்கல் குடுக்கறான்னு கூப்புட்ட உடனே, குடுகுடுன்னு ஓடிப் போய் மொத வரிசைல நின்னாம் பாரு..அதுல முக்காவாசிப்பய நம்ம பயதேன்... அவனப் போயி ரயில உடுறான்னா எப்புடி உடுவான்.. ரவுண்டு கட்டி அடிச்சிட்டு ஏப்பந்தேன் உடுவான்...Fridge கண்டுபுடிக்கும் முன்னாடியே புளியோதரைய கண்டுபுடிச்சு ஒரு மாசம் வச்சு அடிச்சதும் அவிங்க்ய தான்.. Fridge கண்டுபுடிச்சதுக்கப்புறம் கருவாட்டு கொழம்ப ஒரு வாரம் உள்ள வச்சு Combination ல அடிக்கலாம்னு கண்டுபுடிச்சதும் அவிங்க்ய தான்..

மத்த எடத்துல எல்லாம் சிக்கன் மஞ்சூரியா, மட்டன் கோலாபூரின்னு ஊர் பேர்ல ஃபேமஸான ஐட்டம் அங்க ஒண்ணும் இங்க ஓண்ணுமா இருக்கும்..

ஆனா, காஞ்சிபுரம் இட்லி, மதுர வீச்சு புரோட்டா, விருதுநகர் கொத்து புரோட்டா, ராஜபாளையம் கோலா உருண்ட, ஆம்பூர் பிரியாணி, திருநெல்வேலி அல்வா, திருவையாறு அசோகான்னு தமிழ்நாட்டுல 234 தொகுதிக்கும் எதாச்சும் ஒரு ஐட்டத்த கண்டுபுடிச்சு அத‌ Famous ஆக்குனது மட்டுமில்லாம, கல்யாணம், காதுகுத்துன்னு எல்லா எடத்துலயும் அத கட்டு கட்டுன்னு கட்டுனதுலயும் நம்மாளு Creativity யாருக்கும் வராது...

அந்த அளவுக்கு சாப்பாட்டுக்கும் அவனுக்கும் எப்போதும் ஒரு லிங்க் இருந்துட்டே இருக்கும்..

சாப்பாட்ட பக்தனுக்கு குடுத்தா பிரசாதம், பள்ளிக்கூடத்துல குடுத்தா அது சத்துணவு, கட்சிக்காரனுக்கு குடுத்தா அது எலக்ஷன் பிரியாணி, கடவுளுக்கு குடுத்தா அது நிவேதனம், இல்லாதவனுக்கு குடுத்தா அதுக்கு பேரு பிச்ச.. ஆனா இருக்குறவனுக்கே குடுத்தா அதுக்கு பேரு தான் TREATTU!!!!

"தலக்கறி கொளம்புன்னா தங்கச்சி வீட்ல தான் சாப்புடணும்னு சொல்லுவேன்.. அதுலயும் குறும்பாடு...ம்ம்ம்ம்.. கேக்கணுமா" அப்டின்னு பாசத்த காட்டுறதும்..

எலையில விழுந்த Leg Piece சின்னதா இருந்தா (அதென்ன ரம்பா தொடையாடா பெருசா இருக்க??) கோவத்துல வெரண்டு பங்காளியோட சங்க கடிக்க போறதும்...

அப்புறம் சமாதானமா போயி, "டேய் நீ கொஞ்ச நேரத்துக்கு முந்தி சத்தம் போட்ட பயலாச்சேடா.. இங்க என்னடா சாதம் போட்டுகிட்ருக்க.." அப்டின்னு நாமளே மண்ட காஞ்சு போற அளவுக்கு மறுபடி பாசத்துல கட்டிபொரள்றதும்.. அவனுக்கு எல்லாத்துக்குமே சாப்பாடு தான் ஒரு காரணகர்த்தா...சாப்பாட்டு ஐட்டத்த வச்சே ஒரு தமிழனோட கல்வித்தகுதிய என்னன்னு கண்டுபுடிச்சுடலாம்..

கத்திரிக்கா, வெண்டக்கா, சின்ன வெங்காயம் னு சொன்னா, அவன் பஞ்சாயத்து ஸ்கூல் ல படிச்சவன்னு அர்த்தம்..

அதையே Brinjal, Ladies finger, Onion னு சொன்னா அவன் இங்கிலீஷ் மீடியத்துல படிச்சவன்னு அர்த்தம்...

அதையே Aubergene, Oakra, Shallots னு சொன்ன அவன் ஆன்சைட்டுக்கு போயிட்டு வந்த IT Employee னு அர்த்தம்..

அவ்வளவு ஏன்.. ஒட்டுமொத்த திராவிட இனத்தின் வரலாறையே ஒரு கரண்டி அரிசி மாவுல சொல்லிறலாம்..


அத கொழாயில போட்டா அது கேரளா புட்டு,
கிண்ணத்துல ஊத்துனா அது தமிழ்நாட்டு இட்லி,
கல்லுல ஊத்துனா அது தோசை..
அதுலயே கொஞ்சம் கார சட்னிய தடவுனா அது ஆந்திரா கார தோச, உள்ளுக்குள்ள கொஞ்சம் உருளக்கிழங்க ஒளிச்சு வச்சுட்டா அது கர்நாடகா மசால் தோச...

இன்னும் புழிஞ்சா இடியாப்பம், புடிச்சா கொழுக்கட்டை, ஊத்துனா ஊத்தப்பம், ஒன் சைடுன்னா அது ஆப்பம்னு நம்மாளோட Creativity நாடு நகரமெல்லாம் கடந்து பீடுநடை போடும்..

நம்மாளோட Creativityக்கு தீனி போட்டதுல தமிழ் சினிமாவோட பங்கும் கனிசமானது..

ஹோட்டல்ல கூட்டம் அதிகமானா நம்ம அழகன் மம்மூட்டி சொல்ற "ரெவா" உப்புமா, வீட்டுக்கு திடீர் விருந்தாளி வந்தா "இட்லி உப்புமா", ரொமான்ஸ் பண்ண‌ பொண்டாட்டிக்கு டிஃபன் கேரியர்ல மல்லிகப்பூ, அஜால் குஜால் மேட்டருக்கு அல்வா..

இது போக இட்லில பீர் ஊத்தி அடிக்கிறது, அப்பளத்துல பாயசத்த ஊத்தி அடிக்கிறதுன்னு, ஏகப்பட்ட அரிய அரிய அரிய அரிய கண்டுபிடிப்புகள,சாப்பாட்டு ஐட்டங்கள வச்சே இந்த‌ தமிழ்கூறு நல்லுலகத்துக்கு கத்துக்குடுத்துருக்கு...
.
இதென்ன பெரிசு, இதவிடப் பெரிய மேட்டர் ஒண்ணு இருக்கு நம்மாளு Creativityக்கு அடையாளமா....

ஒரு தமிழ்ப் புலவர்கிட்ட அவரோட சமையல்காரன், மதிய சாப்பாட்டுக்கு என்னங்க செய்யட்டும்னு கேட்டப்போ..

அவரு "சற்றே துவையல் அரை.."ன்னாரு..
மறுபடி கூப்புட்டு, "தம்பி, ஒரு பச்சடி வை.."ன்னு சொன்னாரு..
மறுபடி கூப்புட்டு, "வற்றல் ஏதேனும் வறுத்து வை.."ன்னாரு..
அடுத்து, "குற்றமில்லை, காயமிட்டு கீரை கடை..." அப்டின்னாரு..
மறுபடி கூப்புட்டு, "கம்மெனவே, மிளகுக்காய் அரைத்து வைப்பாய் கறி.." அப்டின்னாரு..

அவன் போயிட்டான்.. ஆனா இதுல என்ன‌ Twist அப்டின்னா, இவரு இப்ப சொன்ன மொத்த மெனுவையும் சேத்தா...அது ஒரு வெண்பா...

மத்தியான சாப்பாட்டு மெனுவக்கூட வெண்பால சொல்லணும்னு நம்மாளுக்கு தோணிருக்குன்னா அவனோட‌ Creativityக்கு அத விட என்ன பெரிய உதாரணம் வேணும்..
அந்த நேரிசை வெண்பா இது தான்..

சற்றே துவையலரை, தம்பியொரு பச்சடிவை
வற்றல் ஏதேனும் வறுத்துவை- குற்றமிலை,
காயமிட்டு கீரைகடை, கம்மெனவே மிளகுக்
காயரைத்து வைப்பாய் கறி!"


Creativityயின் உச்சம் தொட்டதுக்கு ஒரு கடைசி உதாரணம்....

ரத்தக் கண்ணீர் படத்துல எம்.ஆர். ராதா "கறி சோறு இருந்தா போடு..ன்னு" பிச்சை எடுப்பாரு.. அவருக்கு எஸ்.எஸ்.ஆர் சீரியசா பதில் சொல்லுவாரு "நாங்க அசைவம் சாப்புடுறதில்ல.. நாங்க ஜீவ காருண்ய கட்சியில சேந்திருக்கோம்".. அப்டின்னு..

அதுக்கு ஒரு பஞ்ச் அடிப்பாரு ராதா..

"அடிச‌க்க‌.... க‌ட்சி.... க‌ட்சி... திங்கிற‌துக்கு கூட‌ க‌ட்சி வெச்சுகிட்டீங்க‌ளாடா.... அது ஒண்ணுக்கு தான் இதுவரைக்கும் இல்ல.. இனி இந்த‌ நாடு உருப்புட்டா மாதிரி தான்டா ய‌ப்பா...." அப்டின்னு..


எதுலயுமே வித்தியாசத்த காமிக்கிற ஆளுங்க நாம தான்.. அதுனால தான்.. "காவிரி விவசாயி எலிக்கறி திங்கிறான்னும் TVல பப்ளிகுட்டி பண்ணிக்கிறோம்.. இன்னொரு பக்கம் சன்டே ஈவினிங் டைம்ல, அந்த ஸ்க்விட்ட Yogurtல‌ Marinate பண்ணி,  Egg Wash குடுத்து, Bread Crumbs ல‌ roll பண்ணி, pan ல‌  stirr fry பண்ணி... Texture, Consistancy, Shape... (ஸ்ஸ்ஸ் இப்பொவே கண்ண கட்டுதே)... அப்டின்னு Kilometer  கணக்குல Peter உட்டும் பப்ளிகுட்டி பண்ணிக்கிறோம்..

இத‌ எழுதும்போதே ஒரு ப‌ழைய‌ பாட்டு நியாப‌க‌த்துக்கு வ‌ருது....

ச‌மைய‌லெல்லாம் க‌ல‌க்குது.. அது ச‌ம‌த்துவ‌த்த‌ வ‌ள‌க்குது....
சாதிம‌த‌பேத‌மெல்லாம்... சோத்த‌க்க‌ண்டா ப‌ற‌க்குது!!!!!!

ஆமா... பெருமையா ஒரு டயலாக் சொல்லி முடிப்போம்..

 "ரவீ... இந்த ஓட்டல்ல பேப்பர் ரோஸ்ட் சாப்டா லிவருக்கு ரொம்ப நல்லது...."

2 comments:

  1. அறுசுவை நடராஜன் போல் விருந்து வைத்து விட்டீர்கள்!
    என்ன ஒரு ஆச்சர்யம்- என் அன்னை அடிக்கடி சொல்லும் 'சற்றே துவையல் அறை தம்பி'- உங்கள் மூலம் திரும்பி கேட்கப் பெற்றேன். நன்றி. நானும் இதே விஷயத்தைப் பற்றி எழுதும் முயற்ச்சியில் இருக்கிறேன்.

    ReplyDelete