Friday, December 25, 2015

தாரை தப்பட்டை - இசை ஞானியின் 1000 வது பட இசை வெளியீடு

எப்போ எப்போன்னு எதிர்பார்த்திட்டு இருந்த இசைஞானியின் 1000மாவது படமான தாரை தப்பட்டையின் பாடல்கள் இன்னிக்கு வெளியாகிருச்சு..

மொதல்ல 1000வது படைப்பை அளித்த சாதனை நாயகருக்கு கோடானு கோடி வாழ்த்துக்களும் நன்றிகளும் சொல்லிக்கிறேனுங்க!!!!

இசையே நீ வாழ்க!!! இசையாய் நீ வாழ்க!!!!!



சென்னை மழை வெள்ளத்துனால தத்தளிச்சு மீண்டு வந்திருக்கிறதுனால இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக இல்லாம எளிமையா பண்ணிட்டாங்க... அது கிடக்கட்டும் பாட்டு எப்படி இருக்கு???? அதப் பாக்கலாம்... நான் விமர்சனம்லாம் பண்ணுனதில்ல...  இது விமர்சனமும் இல்ல...

4 பாட்டு, 2 தீம் இசை உட்பட மொத்தம் ஆறு டிராக்குகள்... மொதல்ல  12 பாட்டு இருக்குன்னு பேசிகிட்டாங்ய.. ஆனா ஆறு தான் இருக்கு...



1) Hero Introduction Theme : ஆரம்பமே அதகளம் தான்.... தாரை தப்பட்டை டைட்டிலுக்கு உண்மையான வேல்யூ இந்த இசை தான்...  நாதஸ்வரம், தவில், உறுமி, தமுக்குன்னு நாட்டுப்புற இசை ஜிவ்வுனு தூக்குது... நாட்டுப்புற இசையை சினிமாவுல நங்கூரம் மாதிரி பாய்ச்சுன இளையராஜாவுக்கு கேக் வாக் மாதிரி... அடி பின்னியிருக்காரு..

2)  வதன வதன வடிவேலன் :  செம்ம  துள்ளலான ஒரு பாட்டு.. இசைஞானி - பாலா கூட்டணியின் முதல் படமான சேதுல வர்ர "கானக்கருங்குயிலே" " சேதுவுக்கு ஓட்டுப்போட்ட தம்பிமாரே" வகையறா பாட்டு...அனேகமா படத்துல "வரூ" இன்ட்ரோவா இருக்கலாம் இல்லன்னா கண்டிப்பா  அவுங்க கரகாட்டம் ஆடுற பாட்டா இருக்கும்னு  நெனக்கிறேன்... ரகள ரகள களகட்டுது...

3)  பாருருவாய:  மாணிக்கவாசகர் திருவாசகத்திலிருந்து ஒரு பாடலை எடுத்து இசையமைச்சிருக்காரு  இசைஞானி...  ராஜா சாரோட "மாயா மாளவ  கௌளை" Classics ல இன்னுமொரு நல்முத்து.. மெலிதான வீணை இசையுடன்  தொடங்கும்  இந்தப் பாடலை நம்ம சூப்பர்  சிங்கர் சத்யபிரகாஷ் உருகி உருகி  பாடியிருக்காரு. இணைந்து ஒலிக்கும் குரல் சுர்முகி.

4) இடரினும் : இசைஞானி எழுதி இசையமைத்திருக்கும் மற்றொரு உருக்கமான பாடல்... "சுப பந்துவராளி" ராகத்துல அமைந்த இந்தப் பாட்டு அப்படியே மனசப் போட்டு பிசையுது... (வைகரையில் வைகைக்கரையில், அழைக்கிறான் மாதவன் பாடல்களை லேசா நினைவுபடுத்துது). பாலா படங்களைப் பொறுத்த வரையில் "பிறையே பிறையே" /  "எங்கே செல்லும் இந்தப் பாதை" ஜானர் ல  இன்னொண்ணு..

5) ஆட்டக்காரி மாமன் பொண்ணு: இந்த ஆல்பத்துல என்னால யூகிக்கவே முடியாத ஒரு சூப்பர் மெலடி டூயட். பாலா படத்துல இந்த மாதிரி ஒரு பாட்டா???ன்னு தோணிகிட்டே இருக்கு...  அடுத்த சில மாதங்களுக்கு எஃப் எம் ரேடியோக்களை நிச்சயம் சந்தேகத்துக்கு இடமில்லாம ஒரு கலக்கு கலக்கும்.  கிரங்கடிக்கிற இசை. இந்தப்பாடலையும் எழுதியிருப்பவர் இசைஞானியே தான்.  பிரசன்னா,  மானசி ரெண்டுபேருமே  ரொம்ப நல்லா பாடியிருக்காங்க..

6) Theme Music : இந்த ஆல்பத்தோட உச்சக்கட்ட இசைப்பதிவு. உண்மையான பாலா - இசைஞானி கூட்டணியின் வெளிப்பாடு.. நாதஸ்வரம், தவில், டிரம்ஸ்,  பம்பை, பறை, எக்காளம், செண்டமேளம்னு அதிரடியான இசைக்கருவிகளோட குலவைச் சத்தமும் சேர்ந்து ஒரு இசைப் பிரளயமே நடத்தியிருக்காரு இசைஞானி. சுருக்கமா சொல்லணும்னா மண்ணின் இசைக்கு  இளையராஜாவின் மகுடம்...

You Tube ல வெளியாகியிருக்கிற இந்தப் பாடல்களைக் கேட்க கீழே உள்ள சுட்டியை சொடுக்குங்க‌ :

https://www.youtube.com/watch?v=eXfaWeFE3jM

மொத்ததில் இந்த 1000மாவது படத்தின் இசை சர்வநிச்சயமாக ராஜா ரசிகர்களைக் கூத்தாட வைக்கும்.. படத்துல எப்படி இதையெல்லாம் பாலா காட்சிப்படுத்தியிருக்காருன்னு  பொங்கல் அன்னிக்கு தெரிஞ்சிடும்!!!

ராஜா சாருக்கு மீண்டும் ஒருமுறை எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களும் நன்றிகளும்!!!

1 comment:

  1. Wow..Superb...Wonderful thoughts on the Raja's 1000th musical production. Antha raga examples super thala. Your blog has inspired me to hear the songs. I will hear the songs once i reach hyderabad.

    ReplyDelete