முந்தி எல்லாம் எலக்ஷன்ல ஜெயிக்க 3 M வேணும்னு ஒரு Saying உண்டு, Man Power, Money Power and Minister Power.. ஆனா இன்னைக்கி Trendடே வேற.. 3 B தான் முக்கியம்.. Batta, Biriyaani and Bottle..இதுல கடைசி ஐட்டத்த பத்தி தான் இந்த பதிவே..
உள்ளூர் சொடலமாடன் கோயில்ல படைக்கிற சாரயத்துல இருந்து, வாட்டிகன் சர்ச்ல படைக்கிற Wine வரைக்கும், சாமிக்கும் சரக்குக்குமே International Level Link இருக்கும் போது ஒரு மனுசன் ஏன் குடிக்க மாட்டான்..
அவ்வளவு ஏன், நம்மூர்ல மது ஒழிப்பு Meeting போடணும்னாலே கூட்டத்துக்கு ஆள் சேக்க, குவாட்டர் வாங்கி குடுத்து தான் கூட்டிட்டு வரவேண்டியிருக்கு...இத தெரிஞ்ச கவர்மெண்டும் டாஸ்மாக்க தொறந்து பாஸ்மார்க் வாங்கிருது..
குடிக்கிறதுக்கு ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு காரணம்.. Friend Compul பண்ணுனான், Weekend Treat, O C தண்ணி, ஆபீஸ்ல Outing இப்டி ஆரம்பிச்சு...Love Failure, Exam ல கோயிந்தா, Appraisal ல சங்கு இப்டின்னு போயி...சரக்கடிக்கலன்னா கைகாலெல்லாம் நடுங்கும்ன்ற வரைக்கும் ஏகப்பட்ட டைப் உண்டு...
இதே மாதிரி வில்லேஜ்லயும், "கருமாதி வீடு, கெடாவெட்டு, காளவா கொளுத்துறது, மாமா ஊர்லேந்து வந்திருக்காருன்னு ஆரம்பிச்சு தெனமும் குடிக்கிறதே, காலைல எந்திரிச்சு பல்லு வெளக்குற மாதிரின்னு பல ரகம் உண்டு..
சரக்கு அப்டிங்கிறதும் Newton's Third Law மாதிரி..
அத அடிக்கிறவன் எல்லாருக்கும் மப்பு வரும் இது "Equal Reaction".. ஆனா சில பேருக்கு கோவம் வரும், சிலருக்கு அழுகை வரும், சிலருக்கு தத்துவம் வரும், சிலருக்கு மூடு வரும், சிலருக்கு வாந்தியோட சேந்து உண்மையும் வெளில வரும்.. இதான் "ஆப்போ"சிட் ரியாக்ஷன்...
குடிகாரங்கள்ளையும் பல வெரைட்டி உண்டு.. சிலர் Professional Type..
Cheers சொல்லி ஆரம்பிக்கிறதுல இருந்து, விஸ்கிக்கு Soda , வோட்காவுக்கு Orange Juice, டக்கீலாவுக்கு Salt, ஜின்னுக்கு Lemonade இப்டின்னு அது அதுக்கு என்ன காம்பினேஷன்ன்னு பக்காவா குடிக்கிறதுல இருந்து, ஒயின் எப்படி குடிக்கிறது, Shooters எப்படி அடிக்கிறது, கடைசில Bottoms Up சொல்லி எப்படி முடிக்கிறது வரைக்கும் பக்கா சிலபஸ் வச்சிருப்பாங்ய...இது போக சரக்குல வெத்தலைய விட்டு ஆட்டிட்டு குடிக்கணும்னு செம Professional Course வேற எடுப்பாங்ய..
அதே மாதிரி, எளநீர்ல சாராயத்த கலந்தடிக்கிறது, பழைய சோத்துல பச்சமொளகா, பட்டசரக்கு ரெண்டையும் மிக்ஸ் பண்ணி புது காக்டெயில கண்டுபுடிக்கிறதுன்னு வில்லேஜ்லயும் விஞ்ஞானிங்க நெரய பேர் உண்டு.. இட்லியையும், பீரையும் கலந்து அடிக்கிறது எல்லாம் இவங்ய முன்னாடி ஜுஜுபி...
அடுத்த டைப், கொஞ்சம் ரிஸ்க்கான ஆளுங்க.. ஓசி தண்ணி ஜாஸ்தி ஆகி அப்ரைசல பத்தி கூட கவலப்படாம, மேனேஜர அப்பு அப்புன்னு அப்புற அளவுக்கு ரைஸ் ஆகுற ஆளுங்க... இவங்ய கூட பெரும்பாலும் ஆபீஸ் ஆளுங்க தண்ணியடிக்காம இருக்குறது நலம்..
சில பேர் சென்ட்டி பார்ட்டிங்க.. ரெண்டு ரவுண்டு உள்ள போனதும் பேசுறத வச்சு நமக்கே சந்தேகம் வரும், நெதானத்துல இருக்கானா இல்ல மப்பு ஏறிடிச்சான்னு..
மொதல்ல சீரியசா தான் ஆரம்பிப்பாங்ய, "இந்த உலகத்துல எதுவுமே கரெக்ட் இல்ல மச்சி.. ஏன் இப்டி நடந்துக்குறாங்கன்னே தெரியல... நீ என்னடா நெனைக்கிற" அப்டின்னு ஒரு தூண்டில வீசுவாங்ய... பதில் சொல்லவும் முடியாம, சும்மா இருக்கவும் முடியாம ஒரு Feel இருக்கே.. (ஆனா ஒண்ணு.. சிக்குனோம்.. செதஞ்சோம்...)
"யாருக்குமே இரக்கமே இல்ல மச்சி.." (இதான் Code Word.. இவருக்கு ஏரிடிச்சு, நாளைக்கு காலைல வரைக்கும் எரக்கமே இல்லன்னு...)
"மச்சி... போனவாரம் Zoo லேந்து தப்பிச்ச Chimpanzee ய ஒரு பொம்பள வெளக்கமாத்தால அடிச்சிருச்சாம்டா.. ஏண்டா இந்த ஒலகத்துல யாருக்குமே எரக்கமே இல்ல.. அதுக்கு எவ்ளோ வலிச்சிருக்கும்.." (உன் கூட வந்ததுக்கு என்ன அடிச்சிருக்கலாம்..).
அப்புறம் தான் மேட்டருக்கு வருவாரு.. "மூணு வருஷம்டா...உட்டுட்டு போயிட்டா மச்சி.. முடியல மச்சீ...(யப்பா சாமி.. என்னாலயும் முடியலடா..).
இப்படி ஆரம்பிக்கிற அலம்பல், அவரா பெரிய மனசு வச்சு நிறுத்துனா தான் உண்டு..
இன்னும் வேற டைப் சலம்பல் உண்டு.. மடக்கு மடக்குனு மூணு ரவுண்ட எருமமாடு கழனித்தண்ணிய குடிக்கிற மாதிரி குடிச்சிட்டு, மேல தீனியையும் திணிச்சிட்டு அந்த எடத்துலயே மட்டையாயிடுவாங்ய..
சலூன் கடைல முடிவெட்டிக்க வர்ரவன விட ஓசி பேப்பர் படிக்க வர்ரவன் அதிகம்ங்கிற மாதிரி.. சரக்கடிக்க வர்ரவன விட, சைட் டிஷ்ஷ கரெக்ட் பண்ண வர்ர ஆளுங்க நெரைய உண்டு.. இதுல வீட்டுக்கு வேற போன போட்டு, நான் பெப்சி தாம்மா குடிக்கிறேன்..இவங்ய தான் குடிகாரப் பசங்கன்னு அசிங்கம் வேற படுத்துவாங்ய..
அதுலயும் சிலபேரு, நாளைக்கெல்லாம் சோறே கெடைக்காதுங்கிற மாதிரி, சிக்கன், சுண்டலு, வேர்க்கல்ல, பெப்சின்னு கண்டதையும் பிரி பிரின்னு பிரிச்சிட்டு, தண்ணியடிச்சவன் மறுநாள் பெட்ட விட்டு எந்திரிக்க முடியாம இருந்தா, இவிங்ய பாத்ரூம விட்டு எந்திரிக்க முடியாத நெலமைல இருப்பாங்ய.. (தண்ணியடிச்ச ஒனக்கே அப்படி இருந்தா, தண்ணி தண்ணியா போற எனக்கு எப்படி இருக்கும்..)
உள்ளூர் கண்ணதாசன், வாலில இருந்து வெளியூர், Bukowski, Charles Jackson வரைக்கும் கவிஞர்களுக்கும், சரக்குக்கும் எப்பவுமே ஒரு கனெக்டிவிட்டி உண்டு..
மது எல்லாவற்றையும் மறக்கச் செய்கிறது..
காதலோ.. உன்னைத் தவிர
எல்லாவற்றையும் மறக்கச் செய்கிறது.. (பிரமாதம்... கவித.. கவித..)
அபின், கொகெய்ன் மாதிரியான போதைப் பொருட்கள் பழக்கத்த உடனே நிறுத்தமுடியும்.. ஆனா சரக்கு அப்டிங்கிறது, புலிவால் மாதிரி தான்.. புடிச்சா விடவே முடியாதுன்னு பலபேருக்கு தெரியாது..Barbiturates and Benzodiazepines மாதிரி கொடூரமான கெமிக்கல்ஸ் இருக்கிற சரக்கை அடிக்க பழகிட்டு, அத நிறுத்தனும் நெனைக்கிறவன்.. தான் சாவுக்கு தானே "டண்டனக்கா" வாசிக்கிறான்னு தான் அர்த்தம்..
அதெல்லாம் நமக்கெதுக்கு.. கோழி குருடா இருந்தாலும், கொழம்பு ருசியா இருக்கில்லடா..
மச்சீ.. இன்னொரு குவாட்டர் சொல்லேன்!!!!!!!
Finishing soooper na.... it reminds my team mates and their silly reasons for drinking... u forgot one more thing ... night vidiya vidiya thanni adichitu morning office vanthathum sathyama inime intha thanniya thodave koodathu machi nu sollitu, next day itself drink panna reason create panniduvanga....
ReplyDelete