பொதுவா IT Company Appraisal க்கு அடிப்படையே ரெண்டே ரெண்டு வார்த்தை தான்... ஒண்ணு Performance.. இன்னொண்ணு Value Addition..
குடுக்கற Rating க வாங்கிகிட்டு கும்புடு போட்டுட்டு போறவன டீல் பண்றதுக்கான வார்த்தை தான் Performance.. ஆனா சிம்புவ கலாய்ச்ச பிருத்திவிராஜ் மாதிரி "நான் வேலையே செய்யலன்னு எப்படி சொல்லலாம்"னு கேக்கற ஆளுங்கள டீல் பண்றதுக்கான வார்த்தை தான் Value Addition..
இந்த Value Addition அப்டிங்கிறது என்னன்னா..."services available at little or no cost, to promote their primary business" அதாவது கவுண்டமணி சொல்ர மாதிரி, மூணு அண்டாவுக்கு ஈயம் பூசுனா, ஒரு குண்டாவுக்கு Freeயா ஈயம் பூசிக் குடுக்குறது தான்..
Tele Communication Departmentல மொதல் மொதலா அறிமுகமான இந்த Value Addition இன்னிக்கு நம்ம வாழ்க்கையில, இல்லாத இடமே இல்லைன்னு சொல்ற அளவுக்கு, பரம்பொருள் மாதிரி பார்க்குமிடமெல்லாம் நிறைஞ்சு போயிருக்கு...
ஒரு குழந்தை பொறக்குறதுக்காக Hospital ல அட்மிட் பண்ணும்போதே, எங்க Hospital ல பிரசவம் பாத்தா, ஒரு வருஷத்துக்கு DPT, BCG, Rotta Virus Vaccication Free அப்டின்னு ஆரம்பிச்சு, அந்த கொழந்தைய School ல சேக்க போனா, எங்க School ல Play School ல சேத்திங்கன்னா, LKG Admission Free அப்டின்னு தொடர்ந்து, Uniform வாங்க கடைக்கு போனா, எங்களது கடையில் 50% வரை தள்ளுபடி (15% க்கு மேல தரவே மாட்டங்ய, அதென்ன 50% வரைன்னு Scotland Yard தான் கண்டுபுடிக்கணும்) அப்டின்னு போயி, பின்னாட்கள்ல பொண்ணு பாக்கும் போது, கூட என்ன கார் தரீங்களா, இல்ல "பைக்"கான்னு கேக்கற வரை இந்த VAS சுத்தி சுத்தி வந்துட்டே இருக்கும்..
அட கையில ஒண்ணுமே இல்லன்னு லோன் வாங்க போனாகூட, எங்க பாங்க்ல லோன் வாங்குனா, processing fee discount அப்டின்னு அங்க கூட இந்த VAS பின்னாடியே வரும்..
இப்டியே எல்லாமே சும்மா தர்ராங்யளோன்னு நம்பி ஏமாந்திறக்கூடாது.. அதுக்கு தான் வச்சிருக்காங்ய VAT அப்டிங்கிற பேர்ல ஒரு ஆப்பு..உதாரணமா ஒரு ஓட்டல்ல போயி காபி மட்டும் குடுங்கன்னு கேட்டா, வலுக்கட்டாயமா ஐஸ் வாட்டர குடுத்துட்டு அதுக்கும் சேத்து காபிக்கு மேல 10% வரிய போட்டுத் தீட்டுனா அது தான் Value Added tax. (வட போச்சே...)
அது தனி டிராக்..
இப்படி எல்லாரும் போட்டி போட்டுகிட்டு அள்ளிக் குடுக்குறதுக்கு காரணம்... அடிப்படைலயே இலவசம், Discount அப்டின்னா நம்மாளுங்களுக்கு அது மேல ஒரு தனி மோகம்..
"Jar of Life"னு ஒரு கதை உண்டு..
France ல School of public Management ல ஒரு Professor தன்னோட students க்கு ஒரு task குடுத்தாரு.. ஒரு ஜாடில "பெரிய கற்கள், கூழாங்கல், மணல், தண்ணி" இத நாலையும் பயன்படுத்தி நிரப்பணும் அப்டின்னு.. இதை எந்த வரிசைல போடுறோம் அப்டிங்கிறதுல தான் அடிப்படை தத்துவமே... பெரிய கற்கள் நம்ம வாழ்க்கையோட முக்கியமான விஷயங்களை குறிக்கும்.. அதுக்கு தான் முதலிடம்.. அடுத்து அதவிட சின்ன கல், மணல், தண்ணி எல்லாமே.. மண்ணையும் தண்ணியையும் மொதல்லயே போட்ட்டுட்டா பெரிய கற்கள போட முடியாது..
அதே மாதிரி தான், தரமான கல்வி, தடையற்ற மின்சாரம், பாதுகாப்பான குடிநீர், நிலையான வேலைவாய்ப்பு மாதிரியான விஷயங்கள் இருக்கும்போது, அடுத்து என்னடா இலவசமா தருவாங்யன்னு யோசிக்க ஆரம்பிச்சிட்டோம்.. அதனால தான் 150 பக்கத்துல 90 பக்கம் வெறும் விளம்பரமாவே இருந்தாலும், முந்திரி பருப்பு பாக்கெட் Freeயா தரான்னு தீபாவளி மலர Advance Booking ல வாங்குறோம்..(அதுசரி, ஒரு பிரியாணி வாங்குனா ரெண்டு அவிச்ச முட்டை இலவசம்னு போர்டு போட்ட ஊரு தான நாம...)
கவர்மெண்ட்ல இலவசமோ, மானியமோ தருதுன்னா அதுக்காக நம்மாளு என்னென்னவெல்லாம் பண்றான்..
நம்ம ஊரு கிராமத்து சைடுல ஒரு Trend உண்டு.. மழை நிவாரணத்துக்காகவே வீட்டுக்கு ஒரு மண் செவுரு வச்சிருப்பான்.. மழை பெய்ஞ்சு நனைஞ்சா அந்த செவுத்த ஒரு ஒத ஒதச்சு தள்ளிட்டு நிவாரணம் வாங்கி சரக்கடிச்சிரலாம்னு..
அதே மாதிரி வீட்டுக்கு 4 கார்டு வச்சிருப்பங்ய, இலவசமா எதாவது குடுத்தா மொத்தமா அடிச்சிரலாம்னு.. விவசாயத்துக்கு மானியம் குடுக்குறாங்கன்னா மொத ஆளா போயி.."நீங்களே பாசனத்துக்கு கொழா வச்சு குடுப்பீங்களா இல்ல கொழா புட்டு வச்சு குடுப்பீங்களான்னு"லைன் கட்டிருவாங்ய..
இது low level னா, middle level ல ஒரு காமெடி நடக்கும்.. Election Duty போட்டா அதுக்கு பேட்டாவும் வாங்கிகிட்டு, Value Addition னு குண்டூசிலேர்ந்து, Bundle கட்டுற நாடா வரைக்கும், பொண்டாட்டி பாவாட நாடாவுக்கு யூஸ் பண்ணிக்கலாம்னு தூக்கிருவாங்ய..
வீட்டுக்கொரு TV, Mixi, Grinder, Fan எல்லாமே இலவசம்னா ஒரு நாளைக்கு 25 மணி நேரம் கரண்ட் கட் ஆகும்னாலும் கவலப்பாடாம நம்மாளு வாங்கிக்கிறான்..
நாகராஜசோழன் MA MLA படத்துல ஒரு டயலாக் வரும்.. "எல்லாத்தையும் இலவசமா குடுத்துட்டாங்க.. நாம ஆட்சிக்கு வந்தா என்னத்த குடுக்குரதுன்னு.. அதுக்கு மணிவண்ணன் ஒரு பஞ்ச் அடிப்பாரு "எல்லாத்தையும் குடுத்துட்டு கரண்ட்ட புடுங்கிட்டாங்க.. பேசாம வீட்டுக்கொரு ஜெனரேட்டர் இலவசம்"னு சொல்லுவோம்னு...
யாருக்கு தெரியும், இதக் காப்பியடிச்சு அடுத்த எலக்ஷன்ல யாராச்சும் Follow பண்ணுனாலும் உண்டு.. நம்மாளுங்களும், எம் பேர்ல ஒரு கார்டு.. எம் பொண்டாட்டி பேர்ல ஒரு கார்டு.. எம் பையன் பேர்ல ஒண்ணு.. மொத்தம் மூணு ஜெனரேட்டர் குடுங்கன்னு கூட கேப்பாங்ய...
இத எழுதும்போது தவிர்க்கவே முடியாம கரகாட்டக்காரன்ல கவுண்டமணி சொல்ர டயலாக் நியாபகம் வருது..
"அட வறுமைக்கு பொறந்தவனே.. டீக்கு அப்புறம் மோரா?.. Freeயா குடுத்தா நீ பினாயில கூட குடிப்ப...!!!!!"

No comments:
Post a Comment