Friday, January 9, 2015

அதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்ட!!!!!

இந்த வாரத்தோட உச்சக்கட்ட பரபரப்பே வேர்ல்ட் கப்புக்கு இந்தியாவோட 15 பேர் அணி அறிவிப்புல தான்.....பாபா ராம்தேவ் குஸ்தில பின்னி எடுத்தார் அப்டிங்கிற பரபரப்பு அடங்குரதுக்குள்ள..."பின்னி" எடுத்ததுக்காக போடுற குஸ்தி ஊருக்குள்ள பப்பரப்பா பரபரப்பு ஆயிடுச்சு...

இதோ.. இதோன்னு எதிர்பார்த்த நம்மளோட 15 பேர் world cup டீமையும் அறிவிச்சாச்சு...

'யுவி' எடுக்கல..பின்னிய எடுத்துப்புட்டாங்ய.. ஆய்.. ஊய்னு பயங்கர கேள்விகள்.. அதுக்கு selection கமிட்டியும் கொஞ்சமும் கவலப்படாம 'நீயா நானா' கோபிநாத் மாதிரி..."வேற...வேற...அடுத்து..ஆங் அவருகிட்ட குடுங்க"னு கூலா பதில் சொல்லி சொல்லிப் பார்த்து.. கடைசில அவர மாதிரியே டேப்பரா படிக்கட்டுல உக்கார்ர அளவுக்கு போயிருச்சு...

தோனி சேனையும்.. "எடுறா வண்டிய.. அமுத்துடா ஆரன..."னு "ஜெய் சுக்கு, முன்னி, இளஞ்சி" சகிதம் கெளம்பிருச்சு....



Selection யுவராஜ், பின்னி, முரளி விஜய் இதப்பத்தி கேள்விய கேக்குற ஆளுங்களும், "இவன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான்" ரேஞ்சுல பிளேயர்ச எடுத்த கமிட்டியும் வசதியா சில பல விஷயங்கள மறந்துட்டாங்க.. (அதாவது உட்டடிச்சுட்டாங்ய...)

1) இன்னைக்கு வரைக்கும் World cup அப்டின்னாலே, கிட்டத்தட்ட ஒரு 25 வருஷமா எல்லாராலும் உடனே நினைக்கப் படுற "டெண்டுல்கர்" அப்டிங்கிற மிகப் பெரிய ஆளுமை இல்லாம இந்திய அணி World cup சந்திக்கப் போகுது... அவரு டீம்ல இருந்ததே நமக்கு ஒரு யானை பலம்... "அவரோட எடத்த நிரப்பபோற ஆளு யாருன்னு கண்டுபுடிச்சிட்டீங்களாய்யா???" அப்டின்னு ஒரு பயலும் வாயே தெறக்கல...

2) ஒவ்வொரு World cup வெற்றிக்கும் அந்தந்த அணியில இருக்குற "ஆல்ரவுண்டர்" (one or more)" தான் முக்கிய காரணமா இருப்பாங்க.. 1983 கபில்தேவ், மதன்லால், அமர்நாத்... 1987 பார்டர், ஓடோனெல்,ஸ்டீவ் வாஹ்....1992 இம்ரான் கான், வாசிம் அக்ரம்... 1996 ரணதுங்கா, குருசிங்கா, டிசில்வா...இப்படி ஒவ்வொரு World cup லேயும்... சமீபத்திய 2011 யுவராஜ் வரைக்கும்..

ஒரே வித்தியாசம் அது Subcontinent பிட்சாக இருந்தா spin bowling ஆல்ரவுண்டரும், Overseas பிட்சா இருந்தா fast bowling ஆல்ரவுண்டரும் இருப்பாங்க...World cup 2015 சிட்னி, மெல்போர்ன் மாதிரி "bouncy pitches" நடக்கப் போகுதுன்னு 4 வருஷத்துக்கு முந்தியே தெரிஞ்சும் ஒட்டுமொத்த இந்தியாவுல ஒரே ஒரு உருப்படியான fast bowling ஆல்ரவுண்டர கூடவா கண்டுபுடிக்க முடியல???? இதப்பத்தி ஒரு பயலும் வாயே தெறக்கல...

கபில்தேவ் & மனோஜ் பிரபாகர் ஜோடிக்கு பிறகு 1996 இருந்தே 19 வருஷமா இந்தியா டீம்ல ஒரு உருப்படியான fast bowling ஆல்ரவுண்டர் கூட கெடையாது..."ஷேன் வாட்சன், கோரி ஆண்டர்சன், கைரன் போல்லார்டு"னு ஒவ்வொரு டீமும் மெரட்டிகிட்டு இருக்கும்போது நம்மால கொறஞ்சபட்சம் ஒரு மனோஜ் பிரபாகர கூட உருவாக்க முடியல..

இத படிச்சிட்டு உங்க புள்ளி விபரம் தப்புன்னு யாராச்சும் பொங்கிட போறாங்க..பிரபாகருக்கு பிறகு "fast bowling ஆல்ரவுண்டர்" அப்டிங்கிற பேர்ல நெரைய பேர் வந்தாங்க... "சஞ்சய் பாங்கர், ரீத்திந்தர் சிங் சோதி, லக்ஷ்மி ரத்தன் சுக்லா, ராபின் சிங், கட்டக் கடைசியா இர்பான் பதான்..." இதுல இர்பான தவிர மத்த எல்லாருமே  அதிபயங்கரமா 90-95 km வேகத்துல பந்துவீசக்கூடிய ஆட்கள்...கடைசியா இர்பான் பதான நம்மாளுக என்ன கொழப்பு கொழப்பி விட்டாங்க...

முந்தாநேத்து ஒரு டிவி இன்டர்வியூல "கிரிஸ் ஸ்ரீகாந்த்" சொல்றாரு "செலக்டர்ஸ் என்ன சார் பண்றது... match is going to happen in Australian pitches and the only fast bowling all rounder on the papers is "Binny"!!!!... (என்ன கொடும சார் இது "On the paper la" 30 பேர் வர்ர வரைக்கும் இந்த world cup "ராயபுரத்துலயோ அல்லது திருவான்மியூர்லயோ பீச் மண்ணுல" நடக்கப் போகுதுன்னா நெனச்சீங்க... ஆனாலும் உங்களுக்கு அநியாயத்துக்கு sense of humor சார்!!!)

3) சரி fast bowling ஆல்ரவுண்டர் தான் சரியில்ல.. Spin bowling ஆல்ரவுண்டர் ஒழுங்கா இருக்காரா அப்டின்னா.. த….த…ப…அது… ஜடேஜா எப்படியும் டாக்டர் சர்டிபிகேட் வாங்கி குடுத்துடுவாரு...( ஏட்டையா பாடி கண்டிசன் நல்லாருக்கு... அவரு கூடிய சீக்கிரமே ஏட்டையா பதவிய சீரும் செறப்பும செம்மையா ஆத்துவாருன்னு சொல்லிட்டாரு!!!!!)

4) 2011 world cup சச்சின், சேவாக், கம்பீர்னு 3 "In-Form" players இருந்த போதே, home groundலயே போட்டி நடந்தப்பவே 25-30 ஓவர்ல "Quarter Final 160/4.... Semi-Final 140/4.... பைனல்ல 120/3 (பிறகு 170/4)னு விக்கெட் போயி.... அதுக்கு பிறகும் 270+ ரன் எடுத்து இந்தியா ஜெயிக்க ஒரே காரணம் "தோனி, யுவராஜ், யூசுப் பதான், ரெய்னா, ஹர்பஜன், ஜாகீர் கான்"னு 6,7,8,9வது இடங்கள்ல மிக வலுவான lower order இருந்தது தான்...

In form top order  இருந்து home groundலயே போட்டி நடந்தப்பவே இந்த நெலமைனா, "வர்ர்ர்ரூம்ம்... ஆனா வராது" ஃபார்ம்ல இருக்குற ஷிகர் தவானையும்... ரெண்டு கேட்ச் மட்டும் விட்டுடுங்கடா.. அதுக்கப்புறம் double century அடிச்சு காட்டுறேன் அப்டிங்கிற ரோஹித் ஷர்மாவையும் வச்சுகிட்டு... அதுவும் ஆஸ்திரேலிய பிட்ச்சுல.... (இப்பவே கண்ணக் கட்டுதே....)..  இதப் பத்தி எவனாச்சும் கேக்குறானா???

சரி யாருங்க உங்க lower order பேட்ஸ்மேன் காட்டுங்க பாப்போம்... "அதே தோனி 6வது எடத்துல... 7,8,9 ???????? ஆறு மேட்ச் பின்னி, 10 மேட்ச் அக்ஸ்ர், அது போக பந்த throw பண்ணவே இப்பத்தான் பயிற்சி எடுக்குற ஜடேஜா.. அப்புறம் ரவி அஸ்வின் (யாராவது அவர Spin bowling ஆல்ரவுண்டர்னு சொல்லிவச்சு மார்லன் சாமுவேல்ஸ், ஸ்டீவ் ஸ்மித்துக்கெல்லாம் பேதி ஆயிடப் போகுது பாத்துக்கோங்க‌...)



5) பேட்டிங்க விட்டுத்தள்ளு... Fast bowling department எப்படி இருக்கு?? Mohammed Shami is the leading wicket taker in team (!!! சூப்பர்ல!!!) இருங்க.. அவசரப்படாதீங்க.. ஆனா அவரு மேட்ச்சுக்கு 60 ரன் விட்டுகுடுத்துருவாரு (அய்யய்யோ!!)... Bhuvaneswar Kumar is great in swinging the ball.. (இது போதுமே).. பொறுங்க சார்... ஆனா அவருக்கு ஸ்பீட் அவ்வளவா வராது.. வெறும் swing தான் (தொலையிது... போன சீசன்ல முனாப் படேல் இதே தான் செஞ்சாப்புடி...)...உமேஷ் யாதவ் நெனச்சமாதிரி ஸ்பீட டெலிவரி பண்ணுவாரு (இவன் தான்யா fast bowler)...அட உங்களுக்கு பொறுமையே கெடையாதுங்க...நெனச்ச மாதிரிஃபாஸ்ட் போடுவாருன்னு தான் சொன்னோம்.. அத line and length போடுவாருன்னு சொன்னோமா??? (அடக் கருமமே.. அதுக்கு நீ போடாமலே இருக்கலாமே).. கட்டக் கடைசியா நம்ம இஷாந்த் ஷர்மா... அவருக்கு முட்டில கொஞ்சம் பிரச்சனை.. எப்புடியாச்சும்.. முயற்சி பண்ணி... (போங்கடா நீங்களும் உங்க....)

6) 2011 ஒரு Specialist  Leg Spinner (பியுஷ் சாவ்லா), ஒரு specialist off spinner (ஹர்பஜன்), ஒரு left arm spinner (யுவராஜ்) இதத் தவிர ஒரு additional spinner (அஷ்வின்) இப்படி variety இருந்தது.. இன்னிக்கு specialist ஸ்பின்னரே ஆஸ்திரேலியா டீம் கொத்து புரோட்டா போடுற அஷ்வின் மட்டும் தான்.. மத்தது எல்லாம் ??? (அத ஏன்யா கேக்குற??...).. வேணும்னா இந்தியாலேந்து ஒரு நரிய அனுப்பி வைக்கலாம்... நரி மொகத்துல முழிச்சிட்டு போனா அஷ்வின் விக்கெட்ட அள்ளிடுவாப்ல.. (.. ...நரி ஊள உட்ருச்சி... வடக்குபட்டி ராமசாமி விக்கெட்ட எடுத்து வைடா!!!!)

7) Modern cricket ஒவ்வொரு டீம்லயும் நிரைய  utility players இருப்பாங்க .. திடீர்னு தேவைக்கு ஏத்த மாதிரி பவுலிங்ல பயன்படுத்திக்க... போன சீசன்ல நம்ம டீம்லயே சச்சின், சேவாக், யூசுப், ரெய்னான்னு ஒரு பட்டாளமே இருந்தது... இந்த சீசன்ல ரெய்னாவ தவிர அந்த எடம் காலி (கோஹ்லி சில சமயம் பந்து வீசுவாப்புல...)

8) 2011 World cup தோனி அடிக்கடி சொல்ற விஷயம் "India has lot of slow fielders.." சச்சின், சேவாக், ஜாகிர், முனாப் இவங்கள்ளாம் பந்த புடிக்க டைவ் அடிக்க மாட்டேங்கிறாங்க.. மாமன் பொண்ணு மேல மஞ்ச தண்ணி ஊத்தப் போற மாதிரி பவுண்டரி வரைக்கும் பின்னாடியே வெரட்டிகிட்டு ஓடுறாங்க" அப்டின்னு... இன்னிக்கு டீம்ல உருப்படியா பண்ற ஒரே விஷயம் பொத்து பொத்துன்னு விழறது தான் (பந்த புடிப்போமான்னு கேக்காதீங்க...)... உங்களுக்கெல்லாம் கூறே இல்ல... அதுக்கு எதுக்கு இவ்ளோ செலவு பண்ணி ஆஸ்திரேலியா வரைக்கும் போகணும்... பேசாம எங்க ஊரு பாலிடிக்ஸ்ல சேந்துருங்க.. நமக்கு இருக்குற விழும் தெறமைக்கு சீக்கிறம் பெரிய லெவல்ல கல்லா கட்டிறலாம்...

9) சரி உங்க ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் பத்தி சொல்லுங்க பாப்போம்.. அவருன்னா தலைவருக்கு உயிருங்க... அவரு ஆடுராரோ இல்லையோ அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல.. அவரு மட்டும் இல்லன்னா தலைக்கு யாரு பிரியாணி வாங்கியாந்து குடுப்பாங்க.??? (அடப்பாவிகளா... மாநாட்டுக்கு ஆள் சேக்க தான் எங்கூர்ல பிரியாணி பொட்டலம் வாங்கி குடுத்து கரெக்ட் பண்ணுவோம்.. இங்கயுமா ???)

இத எல்லாத்தையும் வச்சு பாக்கும்போது, 1992 World cup க்கு போன டீம் தான் எனக்கு நியாபகம் வருது.. சில ஒத்துமைகள பாப்போம்...


  • 1987 ‌ home ground ஆடி semi final வரைக்கும் போயிட்டு அப்புறம் 1992 World cup வெளையாட இதே ஆஸ்திரேலியா / நியூஸிலாந்து போனோம்...
  • அப்போதும், அதுக்கு முந்தின World cup வரைக்கும் "சுனில் கவாஸ்கர்" காலம் நடந்தது... 1992 அதுக்கு மாற்று ஆள் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.
  • இன்னிக்கு டீம்ல 15 பேர்ல 11 பேர் புதுசு.. அன்னிக்கு 14 பேர்ல (சச்சின், ஜடேஜா, ஆம்ரே, காம்ப்ளி, மஞ்சுரேக்கர், பேனர்ஜி, ஸ்ரீநாத், வெங்கடபதி ராஜூ அப்டின்னு) ஒரு 8-9 பேர் புதுசு
  • இன்னிக்கு சம்பந்தமே இல்லாம 6 மேட்ச் பின்னிய ஆல்ரவுண்டர்னு சொல்லி அனுப்பி வச்சது மாதிரி, அன்னிக்கு (மொத்தமாகவே 6 மேட்ச் ஆடியிருக்கிற) பேனர்ஜிய ஆல்ரவுண்டர்னு சொல்லி அனுப்பி வச்சது
  • இதே மாதிரி அப்போவும் ஓப்பனிங் படு சொத்தை.. கேரியரோட கடைசில விளையாடின ஸ்ரீகாந்தும்.. மானாவாரியா 100 பால் தின்னுபுட்டு 25 ரன் அடிக்கிற ரவிசாஸ்திரியும்.
  • Form இருக்குற ஓப்பனர் முரளி விஜய் டீம்ல இல்லங்கிற மாதிரி.. முந்தின சீசன்ல "சிக்சர் சித்து"ன்னு பேர் வாங்கின நவ்ஜோத் சித்து டீம்ல இல்லாதது...
  • இன்னைக்கு தோனி மாதிரி, மொத்தப் பொறுப்பையும் சின்னப் பசங்கள வச்சுகிட்டு அசாருதீன் தோள்ல தூக்கி சுமந்தது...
  • சாஸ்திரி, ராஜூன்னு ரெண்டே ரெண்டு Left arm ஸ்பின்னர மட்டும் வச்சுகிட்டு அன்னைக்கும் ஒப்பேத்துனோம்.. இன்னிக்கு அதே ரெண்டு பேர் ஜடேஜா, அக்ஸர் (அஷ்வின் கோவிச்சுக்க போறாப்ல)..

இவங்கள்ளாம் இவ்ளோ கேள்வி கேக்குறாங்யளே நானும் ஒரே ஒரு கேள்வி கேக்குறேன்....



(போதும்.. அடுத்து நீ என்ன கேக்கப் போறன்னு எனக்கு தெரியும்.. கேட்ட.... படுவா அசிங்க அசிங்கமா பேசிப்புடுவேன்... அன்னிக்கு ஜிம்பாப்வே, பாகிஸ்தான் ரெண்டு டீம மட்டும் ஜெயிச்சிட்டு மத்த எல்லார்கிட்டயும் மரண ஒத வாங்குனோமே.. இந்த தடவையும் அதே மாதிரி தான் வாங்குவோமான்னு தான கேக்கப்போற??????)


இல்லண்ணே.... World Cup முடிஞ்சதும் தோனி கேப்டன விட்டு போயிடுவாரு....கேப்டன விட்டு போயிடுவாரு....ன்னு எல்லாரும் சொல்றாங்களே.. அவரு தான் கேப்டன் கட்சிலயே இல்லயே அப்புறம் எப்படி விட்டுட்டு போவாரு????


2 comments:

  1. Super krishna...the best one was abt the fast bowling all rounder...will look for updates during world cup

    ReplyDelete