வியாதில பல வகை உண்டு... சிலது நாட்டு வைத்தியத்துல குணமாகும்.. சிலது இங்கிலிஷ் வைத்தியத்துல குணமாகும்... சில வியாதிக்கு மருந்தே கெடையாது.... அதுல ஒண்ணு தான் இப்போ நாம பாக்கப் போறது...
"Ohh... okok, URTI.. Phenyl proponolamine Hydrobromide Tablets ரெண்டு நாள் எடுத்துக்கிட்டு Nasivion Nasal drops டெய்லி 3 times போட்டுகோங்க... தேவைப்பட்டா Nebulizer கூட போட்டுக்கலாம்.. Your child will be all right in 2-3 days..."
மேல இருக்குற டயலாக்க படிச்சதும் இது யாரோ Child Specialist டாக்டர் சொன்னதுனு நீங்க நெனைக்கலாம்... ஆனா அதான் இல்ல.. அவ்வளவு ஏன் இத சொன்னது ஒரு டாக்டரே இல்ல... நம்மள மாதிரி ஒரு சாதாரண ஆள் தான்...
தற்செயலா என்னோட கையில இருந்த மருந்து சீட்ட பாத்துட்டு அந்த நபர் சொன்ன டயலாக் தான் நீங்க மேல படிச்சது...
நான் சொன்ன வியாதி இதான்.. "வியாதிக்கு வாலண்டியரா வந்து மருந்து அல்லது அட்வைஸ் குடுக்குற வியாதி...."
அட அவரு உன் நல்லதுக்கு தானப்பா சொல்றாரு.. இதுல என்னத்த குத்தம் கண்ட நீ... அதுபோக, அவரு கரெக்டான மருந்த சொல்லி இருக்கலாம்ல.... அப்டின்னு கேக்கலாம்.. இதுல ரெண்டு விஷயம் நாம தெரிஞ்சுக்கணும்..
(1) இதுக்கு அடிப்படை என்ன ?
(2) இது சரியா தப்பா?
மொதல்ல URTI அப்டின்னா என்னன்னு சொல்லிடுறேன்... Upper Respiratory Tract Infection... அதாவது, தொண்டைக்கு மேல இருக்குற சுவாச உறுப்புகள்ள ஏற்படுற நோய்தொற்று (அ) Infection.. ஒரே வார்த்தைல சொல்லணும்னா "ஜலதோஷம்.."
இது எங்கிருந்து ஆரம்பிக்குது..... பழைய காலத்துல கைவைத்தியம்னு வீட்டுல இருக்கிற துளசி, ஓமம், சுக்கு, மஞ்சள், வேப்பிலைனு அருகாமைல கெடைக்கிற ஒரு பத்து பதினஞ்சு பொருள வச்சுகிட்டே பெரும்பாலான வியாதிக்கு First Aid மாதிரி ஒரு Solution சொல்லிடுவாங்க... அது மனுஷன் சுத்தமான காத்த சுவாசிச்சு, சுகாதாரமான வீட்டு சாப்பாட்ட மட்டும் சாப்ட்டு, ஒரு நாளுக்கு 9 மணி நேரம் தூங்குன காலம்... அதுலயே முரட்டுத்தனமா அரைகுறை ஐடியா எல்லாம் குடுத்த ஆட்கள் உண்டு...
எங்க ஊர்ல ஒரு அம்மாவுக்கு காதுவலி வந்துருச்சு.. அது பக்கத்து வீட்டு அம்மா கிட்ட ஐடியா கேட்ருக்கு..அந்தம்மா.. காதுவலின்னா காதுல மண்ணெண்ணெய் ஊத்துனா சரியாயிடும்னு ஐடியா குடுத்து, அதக்கேட்டு ஊத்துன அம்மாவுக்கு ஒரு சைடு ஸ்பீக்கரே அவுட்டு... (அதென்ன காதா இல்ல பம்படிக்கிற ஸ்டவ்வா??)
இதே URTI க்கு நம்மூர் பக்கம் ஒரு வைத்தியம் உண்டு... மஞ்சள் கிழங்குல பஞ்சு சுத்தி, அதை வேப்பெண்ணெய்ல நனைச்சு வெளக்குல கொளுத்தி, நல்லா எரியும்போது கப்புனு அணைச்சு அந்தப் புகைய உறிஞ்ச சொல்லுவாங்க...
மஞ்சள், வேப்பெண்ணெய் இது ரெண்டுமே Antibiotic னு சொல்லுவாங்க... சந்தேகமே இல்ல... ஆனா பஞ்சுல கொளுத்தி நெருப்பு எரியும்போது, Carbon di Oxide, Nitrous Oxide ன்னு ரெண்டு மோசமான வாயுவ வெளிப்படுத்தும்.. இது வந்த நோய்தொற்ற குணப்படுத்துறதவிட Induce பண்ணுறது தான் அதிகம்... ஆனா நம்ம ஊரு ஆளுங்களுக்கு இதமாதிரி ஐடியா குடுத்துட்டா "Dr. ஆல் இன் ஆல் அழகுராஜா MBBS"ன்னு ஒரு நெனப்பு தானா வந்துரும்... காலமாற்றமும் Technology வளர்ச்சியும் மருந்ததான் மாத்தி இருக்கே தவிர நம்மாளுங்க மனோபாவத்த மாத்தவே இல்ல..
30 வருஷத்துக்கு முந்தி மஞ்சள நெருப்புல கொளுத்தி ஊதுன ஆளுங்க பத்து பதினஞ்சு வருஷத்துக்கு முந்தி தலவலிக்குதா அனால்ஜின்னோ நேவால்ஜின்னோ போடு... ஜலதோஷமா Vicks Action 500 அல்லது D'Cold போடு சரியாபோயிடும்னு ஐடியால அடுத்த கட்டத்துக்கு போக ஆரம்பிச்சாங்க..
ஆனா இவங்க யாருக்குமே தெரியாது "Analgin, Novalgin, Vicks Action 500, D'Cold" இதெல்லாமே இந்திய மருத்துவ கழகத்தால தடை செய்யப்பட்ட மருந்து அப்டின்னு... இது வியாதியோட ரெண்டாவது நிலை...
சமீபத்துல ஊருக்கு போயிருந்த போது ஒரு பெரியவரு "Blood Sugar Meter" (ரத்தத்துல சக்கரையோட அளவ சொல்ற மெஷின்) கையில குடுத்து Assemble பண்ணிக்குடுன்னாரு... நமக்கு ஒண்ணும் தெரியாம திருதிருன்னு முழிக்க.. "நீயெல்லாம் என்னத்த படிச்ச... சுகர் கூட செக் பண்ணத் தெரியல... உங்கப்பால்லாம் உன்னைய கஷ்டப்பட்டு படிக்கவச்சாரு"னு கழுவி ஊத்திட்டாரு... நாம படிச்ச படிப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னே புரியல.. ஆனா அவர பொருத்த வரைக்கும் நான் "Dr. ஆல் இன் ஆல் அழகுராஜா MBBS"ன்னு ஒரு நெனப்பு... (ரைட்டு.. விடு...)
இதோட மூணாவது நிலை அல்லது Technically Advanced நிலை தான் இந்த பதிவோட முதல் Para ல நீங்க படிச்ச நம்ம நண்பரோட ஐடியா...
ஆகமொத்தத்துல கோளாறு மருந்துலயோ அல்லது மருத்துவத்துலயோ இல்ல.. அத சகட்டுமேனிக்கு அடிச்சுவிடுற நம்ம மனோபாவத்துல தான் இருக்கு... ஏன்னா நாமதான் "Dr. ஆல் இன் ஆல் அழகுராஜா MBBS" ஆச்சே....
அடிப்படை என்னங்கிற மொதல் கேள்விக்கு பதில் தெரிஞ்சிடுச்சு.. அடுத்து இது "சரியா / தப்பா" அப்டிங்கிற ரெண்டாவது கேள்விக்கு... ஒரு சின்ன Flashback...
TIFFA - (Targeted imaging for fetal anomalies).. கர்ப்பிணியோட வயித்துல இருக்குற 5 மாத குழந்தையோட வளர்ச்சிய (அ) குறைபாட்ட ஆராயறதுக்காக எடுக்குற Scan.. இன்னிக்கு பிரபலமா எல்லா டாக்டரும் 5வது மாதத்தில் எழுதிக் குடுக்குற ஒண்ணு...
ஒரு IT Professional தன்னுடைய மனைவியோட TIFFA ரிப்போர்ட்ட வாங்கி பரபரப்புல நேரா அதுல இருக்குற comma semicolon ஒண்ணு விடாம நெட்டுல போட்டு தேட ஆரம்பிச்சாரு... முதல் குழந்தையாச்சே.. எந்த தகப்பனுக்கும் உள்ள ஒரு excitement... ஆனா அவருக்கு நெட்டுல இருந்தத படிக்க படிக்க பயத்துல முகமெல்லாம் வெளிறிப் போச்சு.. அடுத்த பத்தாவது நிமிஷம் வீடு.... இருபதாவது நிமிஷம் டாக்டர் அப்பாயின்மெண்ட்.. அரைமணி நேரத்துல டாக்டர் முன்னாடி வந்து உக்காந்தாச்சு...
ரிப்போட்ட வாங்கிப் படிச்ச டாக்டர்.. "OK Good.. It's a normal TIFFA.. She is alright.." அப்டின்னாரு...
நம்மாளு.. "இல்ல டாக்டர்.. அதுல மூணாவது வரில.... " அப்டின்னு இழுக்க..
மொத்த ரிப்போட்டையும் மறுபடி ஒரு தடவ படிச்சிட்டு... "I have read it again completely.. It is pretty normal..." அப்டின்னாரு...
பொறுக்கமுடியாம... "இல்ல டாக்டர்.. I am an IT Professional.. I checked this report line by line in internet... இதுல எதெதோ anomalies இருக்குறதா வருது... நீ...ங்...க...." அவரால முடிக்க முடியல...
ஒரு புன்னகையோட அந்த டாக்டர் சொன்னாங்க... "This can be correctly interpreted only by a Gynecologist...not by an IT Professional..." அது மட்டுமில்ல நீங்க எல்லா விஷயத்துக்கும் நெட்டுல தேடுறது உங்கள தேவையில்லாத குழப்பத்துல தள்ளுமே தவிர எந்த தீர்வும் தராது...
உங்களுக்கு புரியற மாதிரி சொல்லணும்னா... நம்ம ஊர்ல சாதாரணமா நடந்து போயிட்டு இருந்தவரு.. திடீர்னு வயித்தபுடிச்சுகிட்டு விழுந்தாரு.. செத்துபோயிட்டாருன்னு சொல்லுவாங்க.. எத்தன பேருக்கு தெரியும் அவருக்கு வந்தது appendicitis அப்டின்னு... கிராமத்துல ரத்தரத்தமா வாந்தி எடுத்து செத்த ஆளுங்கள காட்டேறி அடிச்சதா தான் சொல்லுவாங்க.. எத்தன பேருக்கு தெரியும் அவருக்கு Cancer அப்டின்னு.. இத சாதாரண ஆளுங்களால சொல்லமுடியாது... ஒரு டாக்டரால மட்டும் தான் சொல்ல முடியும்... Don't worry.. She is alright and the scan is very normal.."
உணர்ச்சிவசப்பட்டு கண்ணெல்லாம் கலங்கிடுச்சு நம்மாளுக்கு... ஆக இது "சரியா / தப்பா???" அப்டிங்கிற ரெண்டாவது கேள்விக்கும் பதில் தெரிஞ்சாச்சு...
ஒவ்வொரு வியாதிக்கும் மருந்து அப்டிங்கிறது நோயோட காரணி, அதோட தீவிரத்தன்மை, நோயாளியோட வயசு, உடல்நிலை அப்டின்னு ஏகப்பட்ட காரணங்கள பொருத்து மாறுபடும்... அதான் வள்ளுவரே சொல்லிருக்காரே :
"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்" அப்டின்னு....

No comments:
Post a Comment