அப்பப்பொ சென்சேஷன் தேடுற நம்மாளுகளுக்கு லேட்டஸ்ட் தீனி "மேகி" மேட்டர் தான்... .. டீக்கடை பெஞ்சுல இருந்து டிவி நியூஸ் வரைக்கும்... ஐயகோ...உலகமயமாக்கலின் விளைவு, பொருளாதாரம்,அஜினொமோட்டோ அது இதுன்னு உலக லெவெல்ல கிண்டு கிண்டுனு கிண்டி எறிஞ்சிட்டாங்ய... இதுல உச்சக்கட்ட காமெடியே, இதுல பாதிப்பேருக்கு மேல இந்த 2 மினிட்ஸ் வஸ்துவ கூட சரியா கிண்டத் தெரியாத ஆளுக அப்படிங்கிறது ...
இவங்ய இந்தக் கிண்டு கிண்டு கிண்டும்போது நம்ம பங்குக்கு எதயாச்சும் கிண்டலாமேன்னு நமக்கு தெரிஞ்ச ஒரு ஓட்டல்காரர் வாயக்கிண்டுனேன்...அதோட விளைவதான் இந்த போஸ்ட் ரூபத்துல என்னோட சேந்து நீங்களும் அனுபவிக்கப் போறீங்க...
வெளிநாட்டு மேகில அதக் கலந்தான், இதக் கலந்தான்னு சலம்பல் பண்ணுற நமக்கு, நம்மூர் ஓட்டல்ல நடக்குற அக்கப்போற பத்திப் பெருசா அக்கரையேயில்ல... குடும்பத்தோட சேந்து எங்காச்சும் போகலாம்னா நாம தேர்ந்தெடுக்குற முதல் சாய்சே ஓட்டல் தான்... அங்க நாம விரும்பி திங்கிற ஐட்டங்கள்ல என்னென்ன கலக்குறாங்கனு ஒரு கிண்டு கிண்டிப் பாப்போம்...
ஓட்டல்ல போனதும் மொதல்ல நாம ஆர்டர் பண்ணுறது சூப்பு தான்... இந்த சூப்ப தயாரிக்க Main Ingredient அதாவது முக்கிய பொருளே Stock (அ) broth னு சொல்லக்கூடிய சாறு தான்... அசைவமா இருந்தா இறைச்சியையோ, சைவமா இருந்தா காய்கறிகளையோ வேகவச்சு அதுல இருந்து இறங்குற ரசத்த தான் Stock னு சொல்லி சூப்ப தயாரிக்க பயன்படுத்துவாங்க.. ஆனா இன்னிக்கு தேதிக்கு அப்டியெல்லாம் யாரும் செய்யிறது இல்ல... மத்த உணவுகளுக்காக வெட்டி முடிச்சதுக்கப்புறம் நாம பயன்படுத்தாத ஒட்டுக்குடல், நாக்கு, சிதறுன துக்கடா மாதிரி ஐட்டங்கள எல்லாம் அண்டாவுல போட்டு தண்ணியகொட்டி அவிச்சு வடிகட்டி தான் Stock செய்யுறாங்க.. சைவமா இருந்தா குடமிளகாயோட மையப் பகுதி, சீவி எறிஞ்ச கேரட் தோல், காலிபிளவரோட கீழ்ப் பகுதின்னு நறுக்கி வீசுன ஐட்டங்கள அவிச்சு எடுத்துறுவாங்க.. மேல 2 ஸ்பூன் எம்.எஸ்.ஜிய போட்டு, உப்பு, மிளகு தூவுனா சூப்பு ரெடி.. நம்ம வீட்டுல நாய்க்கும் மாட்டுக்கும் போடுற மிஞ்சுன ஐட்டத்த தான் காசக் குடுத்து திங்கிறோம்னு தெரியாம நாமளும்.. சூப்பு சூப்பர்னு கன்னி ராசில பிரபு சொல்ற மாதிரி சொல்லி சர்ர்ர்ருனு உறிஞ்சுவோம்...
அடுத்தது Starters... கபாப்... டக்கிலோ... சிக்காங்கொக்கா... எஸ்ட்ரா.. எஸ்ட்ரா...எஸ்ட்ரா.... அதாவது எண்ணெயில பொறிச்ச ஐயிட்டங்கள்...
மூணு கிலோ கடல பருப்பு (கிலோ 45-50 ரூ) ஆட்டுனா தான் , ஒரு லிட்டர் கடலெண்ணெய் கிடைக்கும் . ஆனால் ஒரு லிட்டர் எண்ணெயே 95 ரூவாய்க்கு சந்தைல கெடைக்குது. பிறகு எப்படி குடுக்க முடியுது.. இதுல எந்த எண்ணெயுமே ஒரிஜினல் கடலை எண்ணெய் இல்ல.. பெட்ரோலிய கச்சா எண்ணெயில் , கடைசியா மிஞ்சுற தாரில் இருந்து பிரிச்சு எடுக்குற நிறமற்ற, மணமற்ற ஒரு எண்ணெயில தாவரக் கொழுப்பையும், எசென்சையும் ஊத்திக் கலக்குன மலிவு விலை எண்ணெய் தான்.. இதுல செய்யிற ஐட்டங்களத்தான், Starters னு சொல்லி வாங்கி அடிக்கிறோம்..
ஓட்டல்ல ரொம்ப பிரபலமான, நாம விரும்பி சாப்புடுற ஒரு உணவு "பன்னீர் பட்டர் மசாலா".. ஒரு bowl சராசரியா 120 ரூவாய்க்கு விக்கிற இந்த உணவைத் தயாரிக்க முக்கியப் பொருளே முந்திரி விழுது தான்... 100 கிராம் முந்திரி பருப்பே 94 ரூவா இருக்கும் போது 120 ரூவாய்க்கு எப்படி பன்னீர் பட்டர் மசாலா செய்ய முடியும்.. அதான் சூட்சமமே...
முழு முந்திரிய பாத்தீங்கன்னா அதோட முனைல மூக்கு மாதிரி ஒண்ணு இருக்கும்.. விற்பனைக்காக தரம் பிரிக்கும் போது இந்த மூக்குப் பகுதிய நீக்கிட்டு தான் விப்பாங்க.. அத எல்லாத்தையும் எடுத்து கிலோ 35-40 ரூவாய்க்கு ஓட்டலுக்கு சப்ளை பண்ணிருவாங்க.. அதத்தான் அரைச்சு ஊத்தி மசாலாவாக்கி நமக்கு விக்கிறாங்ய.. இந்த மூக்கு ஐட்டம் நம்ம வீட்டுல சுத்தம் பண்ணி கோழிக்கு போடுற வஸ்துன்னு கிராமத்து ஆளுகள கேட்டா சொல்லி சிரிப்பாங்ய... இந்தக் கருமத்த நான் கண்ணால நேர்லயே பாத்து தொலைச்சேன்..
அடுத்தது பஞ்சாபி சோலே மசாலா... கருப்பு கொண்டைக் கடலைல செய்யிற ஒரு வட இந்திய உணவு.. இதுல விருவிருப்புக்காக பஞ்சாபிகள் சேக்குற ஒரு ரகசிய பொருள் டீ டிக்காஷன்.. ஓட்டல்ல இதுக்காக உக்காந்து டீயெல்லாம் போட்டுட்டு இருக்க மாட்டங்க.. காலைலேந்து டீ போட்டு வடிகட்டுன சக்கைய மொத்தமா கொட்டி அவிச்சு வடிகட்டி ஊத்திருவாங்க.. நம்ம வீடுகள்ல ரோஜா செடிக்கு போடுவோமே அதே டீத்துள் சக்கை தான்.
புஸ்ஸுனு வருதுன்னு ஓட்டல்ல இந்த மசாலாக்களோட சேத்து நாம அடிக்கிற இன்னொரு ஐட்டம் புல்கா ரொட்டி... அந்த நண்பர் சொன்னத அப்படியே சொல்ரேன்.. "கம்மி வெலைக்கு ஒரு சுமார் டால்டா கெடைக்குங்க.. அதுக்கு அகர்வால் டால்டானு நாங்க ஒரு அடையாளப் பேரு வச்சுக்குவோம்... அதையும் சோடா உப்பையும் மொத்த மாவுல கால் வாசி கலக்குனோம்னா புசுபுசுன்னு புல்கா வரும்..." அப்புறம் என்ன... அத வாங்கித் தின்னுபுட்டு வயித்த ஜிலேபிப்பை மாதிரி புடிச்சுகிட்டு வடக்கையும் தெக்கையும் அலைய வேண்டியது தான்...
பாஸ்ட் புட் கடையில இருந்து படு பார்ஷான ஓட்டல் வரைக்கும் பிரபலமான ஒரு உணவு "Fried Rice"... சோத்த எண்ணெயில வறுத்து விக்கிறது.. அவ்வளவு தான்.. இதுல பல அநியாயம் நடக்குது.. மொதல்ல இதுக்கு சாதத்த எப்ப வடிக்கிறாங்கனு பாக்கணும்..
மாலை 7 மணிக்கு Fried Rice செய்யணும்னா காலைலயே சாதம் ரெடி ஆகிடும்.. அதுவும் வர்ரவங்ய நெரைய தின்னுடக் கூடாதுனு முக்காப் பதத்துல எறக்கிடுவாங்க... காலைல வச்ச சாதம் போரடிக்குதுன்னு அத நாய்க்கு போட்டுட்டு ஓட்டல்ல போயி அதையே காசக் குடுத்து வாங்கித் திங்கிறோம் நாம...
இதுல சேக்கப் படுற முக்கியமான ஒரு பொருள் எம்.எஸ்.ஜி.. Mono Sodium Glutamate... அதாவது. "உமாமி" என்கிற ஏழாவது சுவைக்காக சீனாவுல பயன்படுத்துற ஒரு வகையான உப்பு.. இருந்தாலும் உப்ப உப்புன்னு சொல்லாம கிரிஸ்டல்னு சொல்ற மாதிரி, உமாமிக்கு நம்மாளு வச்ச பேரு தான் அஜினோமோட்டோ... கொஞ்ச நாள் முந்தி வரைக்கும் சாம்பார், ரசத்துல எல்லாம் கலக்குங்கனு விளம்பரம் போட்டவங்ய, இது கேன்சர் செல்களை உடம்புல தூண்டுதுன்னு உண்மை லீக்கானதும் கப்சிப்புனு ஆயிட்டானுங்க.. அந்த சீன சைத்தானத் தான் முக்கிய பொருளா தூவி Fried Rice தயாரிக்கிறாங்க.. நாமளும் இந்த உண்மையத் தெரியாம காசக் குடுத்து கேன்சர இன்ஸ்டால்மென்டுல வாங்கிக்கிறோம்.. இதக் கலந்துபுட்டாங்யன்னு தான் மேகி மேட்டர மேய் மேய்னு உலகமே மேயுது...
இதெல்லாம் பெரிய ஓட்டலுக்கு போற ஆளுங்களுக்கு தான அப்டினு கேக்குறவங்க ரெடி ஆயிக்கோங்க அடுத்த மேட்டர் உங்களுக்கு தான்.. ரோட்டோர புரோட்டா கடைகள்ள கொவளையில குருமாவ மொண்டு ஊத்துவாங்களே பாத்துருக்கீங்களா.. "வெங்காயம், தக்காளி, இஞ்சிப்பூண்டு விழுது, காரப்பொடி, தனியா, மஞ்சள்தூள்" இந்த ஆறு முக்கியப் பொருள்களோடகறியோ அல்லது காய்கறியோ சேத்து தண்ணிய ஊத்தி கொதிக்க வைப்பாங்க.. அத கெட்டியாக்குறதுக்கு நம்ம வீடுகள்ல,,"தேங்காயும் சோம்பும் (அ) முந்திரி" அரைச்சு ஊத்துவோம்.. ஒரு தேங்கா 18 ரூவாய்க்கு விக்கும் போது திக்கான குருமா ஒரு அண்டா நிரைய செய்ய எவ்வளவு தேங்கா வேணும் யோசிங்க... பிறகு எப்புடி மொண்டு மொண்டு ஊத்துறது??..
குடும்பப் பொண்ணுக்கு பொம்மிஸ் நைட்டி மாதிரி குருமாவுக்கு குதிரைச் சாணிப் பொடி... (நீங்க படிச்சது கரெக்டு தான்..) காயவச்ச குதிரச் சாணியப் பொடியாக்கி அதையோ (அ) மரத்தூளையோ கலந்து மேற்கொண்டு எம்.எஸ்.ஜி கருமத்தையும் அப்டியே மழைச்சாரல் மாதிரி பரபரபரன்னு அப்டியே பெய்ய விட்டு.. கிண்டு கிண்டுனு கிண்டுனா.. குருமா ரெடி... நம்மாளுகளும் குருமாங்கிற பேர்ல குதிரைச் சாணியத் திங்கிறோம்னு தெரியாம... "பொரட்டாவ பிச்சு அதுல குருமாவ ஊத்திப் பொரட்டி அடிப்போம்ல...."னு மார் தட்டிக்குவாங்ய...
இப்படியெல்லாம் சொல்லி எங்களை வாந்தி எடுக்கவைக்க முடியாது.. நாங்களெல்லாம் சாக்கடைக்குள்ளேயே ஒரு மாமாங்கம் கூடுகட்டி வாழ்ந்த வித்தைக் காரர்கள்னு சொல்ற புலிகேசியா நீங்க.. இந்தா புடிச்சுக்கங்க... திருப்பதி தேவஸ்தானத்தில் பெரிய வருமானத்தில் ஒன்று நாம காணிக்கையா குடுக்குற முடி.. ஒரு வருஷத்துக்கு 132 கோடி ரூவாய்க்கு சீனாவுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் ஏலம் விடப்படுது... "மனுச மசுரக் கொண்டுபோய் என்னய்யா செய்வாங்ய?"னு கேக்குறீங்க தானே.. வெள்ளாவில வெளுத்து, ஆல்கஹால்ல அலசி அதுல இருந்து "கெரட்டின்"ங்கிற புரதத்த பிரிச்சு எடுப்பாங்க.. அது தான் சாக்லேட் தயாரிப்புல உமாமி சுவைக்காக சேர்க்கப் படுற முக்கியப் பொருளே.. சாப்பாட்டுல ஒரு முடி விழுந்தாலே சண்டைபோடுற நாம சாக்லேட்டே அதுலேந்து தான் தயாரிக்கிறான்னு தெரியாம சப்புக்கொட்டி நக்குறோம்..
"இவங்ய இப்புடித் தான்யா.. டாக்டரே சொல்லிட்டாரு.. ஓட்டலுக்கு போனா இட்லி மட்டும் சாப்புடுன்னு" அப்டிங்கிற ஆட்களுக்கு... இட்லி எப்டி தயாராகுதுன்னு தெரிஞ்சுக்கோங்க... மார்க்கெட்டுல கெடைக்குற மட்டமான மலிவு விலை அரிசி, முந்தின நாள் வச்சு மீந்து போன சோறு, மிச்சமுள்ள இட்லி, ஊறவச்ச ஜவ்வரிசி இதெல்லாத்தையும் ஒண்ணாப் போட்டு அரைச்சு, அதுல ஆப்ப சோடாவ போட்டு கிண்டி வச்சுருவாங்க.. அத ஊத்துறது இன்னும் ஹைலைட்டு.. தட்டுல தண்ணியத் தெளிச்சு, கைய உள்ளவுட்டு வழிச்சு, ஒவ்வொரு குழியிலயும் சொத் சொத்துனு ஒவ்வொரு அடி.. என்ன ஒண்ணு.. நடுநடுவுல அரிச்சாக்க பட்டாபட்டி மேல லைட்டா ஒரு சொறி சொறிஞ்சுக்குவாப்ல அவ்வளவு தான்..
இதெல்லாத்தையும் வாங்கி அடிச்சிட்டு கல்லீரல் கருங்கல்லாப் போயி, மண்ணீரல் மண்ணோட மண்ணாப் போயி, நுரையீரல் நொரதள்ளிப்போயி, மொத்ததுல பயபுள்ளைக்கு பல்ஸே பைப்பாசுல போற அளவுக்கு ஆயிடுது..
சரி குடும்பத்தோட சாப்புடணும்னா என்னத்த தான் திங்கிறதுன்னு கேக்குற ஆட்களுக்கு ஒரு ஓசி டிப்ஸ்.. செலவில்லாத ஆனால் ஆரோக்கியமான ஒரு வழி.. உங்கள் பிள்ளைகளில் எத்தனை பேருக்கு இது பரிச்சயம்...????
வீட்டில் சமைத்த குழைந்த சாதத்தை அம்மாவின் சுத்தமான கையினால் பிசைந்து உருட்டிக் கொடுக்க, கதைபேசியபடி குடும்பத்தோடு உக்கார்ந்து சாப்பிட்ட நிலாச்சோறு.... Try பண்ணித்தான் பாருங்களேன்....

No comments:
Post a Comment