பொதுவாவே தமிழ் சினிமா இசை வரலாறு பத்தி எந்த Critic கிட்டகேட்டாலும்..."ஜி.ராமநாதன்...எம்.எஸ்.வி..இளையராஜா-ஏ.ஆர்.ரகுமான்..."இப்படி நாலே வார்த்தைல சொல்லிடுவாங்க... ஏன்னு கேட்டா இவங்க தான் 60, 70, 80, 90 கள்ள தமிழ் சினிமாவை ஆண்டவர்கள் அப்டின்னு பதில் வரும்...
மொதல் மூணு எப்படி இருந்தாலும் 90கள் விஷயத்தில மட்டும் இந்த பொதுவான கருத்து உண்மையில்ல.. அதான் நிஜமும் கூட...
சில பேரு ஆமாமா 90ல கூட இளையராஜா கலக்கிட்டு இருந்தாருன்னு சண்டைக்கு வருவாங்க...
ஆனா 90களில் தமிழ் சினிமா இசையை ஆண்டது... தேவா தான்....
ரொம்ப இன்டெரெஸ்டிங்கான விஷயம் என்னன்னா... அந்தக்காலத்துல இளையராஜாவுக்காக மட்டுமே ஓடுன ராமராஜன் படத்துல தான் தேவா அறிமுகம் ஆனாரு (மனசுக்கேத்த மகராசா).. ரொம்ப நாள் வரைக்கும் அதெல்லாம் இளையராஜா போட்ட பாட்டுன்னு நெனச்சிட்டு இருந்தேன்...
ஆரம்பத்துல மணிரத்னம், ஷங்கர் மாதிரி காஸ்ட்லி இயக்குநர்களின் ஃபேவரைட்டா ரகுமானும், வருஷத்துக்கு 25 படம்னு வகைதொகையில்லாம அடிச்சு தள்ளிகிட்டு இளையராஜா இருந்ததும் தேவாவை "Budget Director's Ilaiyaraja"ன்னு அடையாளம் காட்டிச்சு...
அதக் கரெக்டா புடிச்சிகிட்டு தேவாவும் இளையராஜா பாணியிலயே ஜெராக்ஸ் எடுத்து தள்ளுனாரு.. உதாரணத்துக்கு கொஞ்சூண்டு....
- ஆடியில சேதி சொல்லி - என் ஆசை மச்சான்
- கூவுற குயிலு சேவல பாத்து - சோலையம்மா
- நில்லடி என்றது உள் மனது - காலமெல்லாம் காத்திருப்பேன்
- செம்பருத்தி செம்பருத்தி - வசந்த காலப் பறவை
- ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா - கட்டபொம்மன்
- சின்னப்பொண்ணு தான் வெக்கப்படுது - வைகாசி பொறந்தாச்சு
- ஒத்தையடிப் பாதையில - ஆத்தா உன் கோயிலிலே
ரசிகன், தேவா, செல்வா, விஷ்ணு, செந்தூரப்பாண்டினு (நல்லகாலம் விக்ரமன் பூவே உனக்காக எடுத்து தமிழ்நாட்டக் காப்பாத்துனாரு)
இந்த சமயத்தில் தான் மெல்லிசை மன்னரால் தேவா "தேனிசைத் தென்றல்"னு பாராட்டப் பட்டதெல்லாம்...
தேவா சார் கேரியர மூணு அஜித் படத்த வச்சு சொல்லிரலாம்...
ஆசை
1995ல வந்த இந்தப்படம் தான் "இளையராஜாவோட Copy Cat" அப்டிங்கிற ஷெல்ல ஒடச்சு "தேவா டைப் மியூசிக்" அப்டின்னு ஒரு புதிய அடையாளத்த வாங்கிக் கொடுத்துச்சு... அதுமட்டுமில்லாம அதுவரை எஸ்.பி.பி, மனோ, ஜானகி, சுவர்ணலதான்னு இருந்த டிரென்ட மாத்தி ஹரிஹரன், உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம்னு ஒரு புது கூட்டணிய ஆரம்பிச்சு வச்ச படம்னும் சொல்லலாம்...
இந்த மூணு பேருமே ஏ.ஆர். ரகுமான் இசையில் அறிமுகம் ஆகியிருந்தாலும், இவங்க மூணு பேரையும் தேவா அளவுக்கு படத்துக்கு ரெண்டு பாட்டு குடுத்து கதறக் கதற Parade எடுத்த ஆளு யாரும் இருக்கமாட்டாங்க...
பின்னாட்களில் வந்த வாலி, குஷி, ஆஹா, கண்ணெதிரே தோன்றினாள், காலமெல்லாம் காதல் வாழ்க, நேருக்கு நேர், அப்பு மாதிரி படப் பாடல்களை கண்ணமூடிகிட்டு கேட்டாலும் இது தேவா மியூசிக்குனு சொல்லவச்ச அந்த டிரெண்டுக்கு அஸ்திவாரம் இந்தப்படம்....
வான்மதி :
தனக்கு பெரிய பிரேக் கெடச்ச அஜித் காம்பினேஷன்ல அகத்தியன் கூட "மதுமதி"ன்னு ஒரு படம் பண்ணிட்டு 1996லஅதே ஜோடி மீண்டும் "வான்மதி" படத்துல சேந்துச்சு...
"லியோ கப்பாசா"
கேக்கும்போது என்னன்னே அர்த்தம்புரியாம ஏதோ ஒரு ரஷ்ய விஞ்ஞானியோட பேரு மாதிரி இருந்தாலும் இந்த்ப் பாட்டு அன்னிக்கு தேவா சார் கேரியர்லயும், தமிழ் சினிமா இசையிலும் ஒரு பெரிய ஷிஃப்ட கொண்டு வந்துச்சு...
எனக்கு தெரிஞ்சு தமிழ்சினிமாவின் முதல் கானா பாட்டு (அல்லது குறைந்தபட்சம் முதல் சூப்பர்ஹிட் கானா பாட்டு ) இதுவாகத்தான் இருக்கும்...
இந்தப் பாட்டு குடுத்த பிரேக்னால ஆளாளுக்கு அடிச்சுப் புடிச்சு தேவா சார் கிட்ட கானா பாட்டு வாங்க ஆரம்பிச்சாங்க..
அடுத்து அடுத்து வந்த கானா பாடல்கள் அன்னிக்கு காலேஜ் மாணவர்களின் தேசிய கீதமாவே மாற ஆரம்பிச்சது...
வடுகபட்டி, ஆண்டிபட்டி,குச்சனூருன்னு அதுவரைக்கும் கேட்ட ரசிகனுக்கு "ஆனை கவுனி, அயனாவரம், பார்டர் தோட்டம், காசிமேடுன்னு தேவாவோட கானா பாடல்கள் அறிமுகப் படுத்துன வார்ததைகள் எல்லாம் புதுசா இருந்தது...
- கவலைப் படாதே சகோதரா - காதல் கோட்டை
- அண்ணா நகர் ஆண்டாளு - காலமெல்லாம் காதல் வாழ்க
- குன்றத்துல கோயில கட்டி - நேசம்
- ஊத்திகினு கடிச்சுக்கவா - நினைவிருக்கும் வரை
- கந்தன் இருக்கும் இடம் - காதலே நிம்மதி
- குலுக்கி வச்ச கொக்ககோலா - உயிரிலே கலந்தது
- திருப்பதி ஏழுமல வெங்கடேசா - நினைவிருக்கும் வரை
டாப் கியர போட்டு தூக்கு தூக்குனு தூக்க ஆரம்பிச்சாரு தேவா...
காதல் கோட்டை :
அதே 1996ல அதே அஜித்-அகத்தியன்-தேவா-சிவசக்தி பாண்டியன் கூட்டணியல வந்து இந்திய சினிமாவுலயே பெரிய ஹிட் அடிச்ச காதல் கோட்டை தேவாவ எங்கேயோ கொண்டு போயிருச்சு..
அப்டியே ரெண்டு காலையும் பூஷ் பண்ணி... கிருட்டு கிருட்டு கிருட்டுனு போயிகிட்டெ இருந்தாரு தேவா...
ரஜினிக்கு அருணாசலம், அண்ணாமலை, பாட்ஷா... கமலுக்கு அவ்வை ஷண்முகி, PKS , பஞ்ச தந்திரம்..... விஜய்க்கும் அஜித்துக்கும் அன்னிக்கு தேதில வந்த 90% படங்கள்... இது போக பிரசாந்த்துக்கு கல்லூரி வாசல், கண்ணெதிரே தோன்றினாள், அப்பு... சரத்குமாருக்கு நட்புக்காக, பாட்டாளி, சிம்மராசி... இப்படி Top to Bottom, Tamil Cinema Industryல யார் நடிச்சு படம் வந்தாலும் இசை தேவா தான்னு ஒரு ட்ரெண்டு வர்ர அளவுக்கு அசுர வளர்ச்சி அடஞ்சாரு தேவா.. 80கள்ள இளையராஜா இல்லாம படல் இல்லனு ஒரு டிரெண்ட் இருந்துச்சே அதுக்கு கொஞ்சமும் குறையாத வளர்ச்சி...
இதுல ரெண்டு பேருக்கும் ஒரு சின்ன வித்தியாசம் உண்டு.. தான் உச்சத்துல இருந்தபோது தனக்கு நிகரா யாருமே வளரமுடியாத அளவுக்கு விஸ்வரூபம் எடுத்தது இளையராஜாவின் சாதனை.. சொல்லப்போனா முறியடிக்க ரொம்பவே கஷ்டமான சாதனை தான்..
ஆனா விக்ரமனுக்கு எஸ்.ஏ.ராஜ்குமார்...... , சரணுக்கு பரத்வாஜ்..... , மணிரத்னம், ஷங்கர், ராஜீவ் மேனனனுக்கு ரகுமான்...., பாசில், பாலுமகேந்திரா, ஆர்.வி.உதயகுமார் படங்களுக்கு இளையராஜா... இது போக உள்ளத்தை அள்ளித்தா, நாட்டாமை, கோகுலம்னு ஆடிக்கொண்ணு அம்மாவாசைக்கு ஒண்ணு ஹிட் குடுத்த சிற்பி இப்படி கடுமையான போட்டி இருந்த காலத்திலும் "He was able to make it possible"... அதனால தான் மொதல்லயே சொன்னேன் 90களில் தமிழ் சினிமா இசையை ஆண்டது தேவா தான் அப்டினு...
இதற்கான காரணங்கள் என்னன்னு கொஞ்சம் பாப்போம்....
80 கள்ல வளச்சு வளச்சு எடுத்த , சின்ன கவுண்டர், சின்ன ஜமீன், பெரிய மாப்பிள்ளை, பாட்டுக்காரன், மாட்டுக்காரன், பண்ணக்காரன், காவக்காரன் இது மாதிரியான படங்களும் அதில் இருந்த ஒரே மாதிரியான இசைவடிவமும் ரசிகனுக்கு சலிச்சு போனது...
அடுத்து வந்த College Era படங்களுக்கு (அஜித், விஜய், பிரசாந்த், 40 வயசானாலும் அசராமல் காலேஜுக்கு போன முரளி) இளையராஜாவின் இசை பொருந்தாமல் போனது (இதயம் படம் மட்டும் விதிவிலக்கு)...
லா லா லான்னு ஒரே ஒரு டியூன வச்சுகிட்டு கொஞ்சம் கூட சளைக்காம எல்லா படத்துக்கும் போட்டுக்குடுத்த (ஹிட்டும் அடிச்ச) எஸ், ஏ. ராஜ்குமார்
டெக்னாலஜி வளர்ச்சியும், பெரிய பட்ஜெட் படங்களுமாய் எட்டமுடியாத உயரத்தில் இருந்த ஏ.ஆர்.ரகுமான்...
Folk Music ல Vareity எதிர்பார்த்த audienceக்கு தேவா, சபேஷ் குரல்களில் "கானா"னு ஒரு புதிய இசை வடிவம் கொடுத்த உற்சாகம்..
ஹரிஹரன், உன்னிகிருஷ்ணன் குரல்கள் விஜய், அஜித் மாதிரி இளம் நாயகர்களுக்கு பொருந்திப் போனது...
எல்லாத்துக்கும் மேல 5 தம்பிகள், கூடவே மகன் ஸ்ரீகாந்த் தேவான்னு 6 பேரோட வேலை செஞ்சதால மியூசிச் ஃபேக்டரி மாதிரி வருஷத்துக்கு 30 படம்னு பண்ணித் தள்ளுனாரு தேவா...
கிட்டத்தட்ட 10-13 வருஷத்துல 400 படங்களுக்கும் அதிகம்னு கணக்கு சொல்லுது விக்கிபீடியா...
Beetles கிட்ட சுட்டது, LP கிட்ட ஆட்டைய போட்டது, Back Street Boys ஆல்பத்தோட "Ctrl C - Ctrl V"ன்னு ஆயிரம் விமர்சனம் வந்தாலும், மில்லீனியத்தை ஒட்டி வந்த தேவாவோட பாடல்கள் அவரோட தனித்துவமான பாடல்களா தான் எனக்கு தெரியும்... உதாரணத்துக்கு....
- அவள் வருவாளா - நேருக்கு நேர்
- பூசு மஞ்சள் பூசு மஞ்சள் - கனவே கலையாதே
- ஒரு மணியடித்தால் உன் நியாபகம் - காலமெல்லாம் காதல் வாழ்க
- கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு - வெற்றிக்கொடி கட்டு
- மொட்டு ஒன்று மலர்ந்திட நினைக்கும் - குஷி
- நிலவைக் கொண்டுவா - வாலி
- கனவே கலையாதே - கண்ணெதிரே தோன்றினாள்
- கொச்சின் மாடப்புறா - புருஷ லட்ஷணம்
- கருடா கருடா - நட்புக்காக
- முதன் முதலில் பார்த்தேன் - ஆஹா
- மனசே மனசே குழப்பமென்ன - நெஞ்சினிலே
சொல்லிட்டே போகலாம்.. அவ்வளவு அருமையான பாடல்கள்...
2000 - 2010 ல இந்த வேகம் "சபேஷ்-முரளி", "ஸ்ரீகாந்த் தேவா" போன்றவர்கள் தனித்தனியா இசையமைக்க ஆரம்பிச்ச பிறகு கொஞ்ச கொஞ்சமா கொறைஞ்சு ஒரு கட்டத்துல நின்னே போச்சுன்னு சொல்லலாம்...
யுவன், ஹாரிஸ் மாதிரியான இசையமைப்பாளர்களின் வருகையும், அடுத்துவந்த ரத்தக்களரி வகை படங்களும், காலமாற்றம் ரசிகனுக்கு அடுத்த டிரெண்டை அறிமுகம் செய்துவைத்ததும் ஒரு முக்கிய காரணம்...
எது எப்படி இருந்தாலும் தமிழ் சினிமா இசையில் தேவாவுக்கென்று ஒரு மிகமுக்கியமான இடம் உண்டு...
அதை ஒதுக்கிவிட்டு தமிழ் சினிமை இசையின் வரலாற்றை சொன்னால் அது முழுமையானது அல்ல என்பதே உண்மை...
தேவா சார்!!!!!!!! You Should come back again and you will!!!!!!! ( மீசக்கார நண்பா..... உனக்கு ரோஷம் அதிகண்டா.......)
No comments:
Post a Comment