Thursday, June 5, 2014

அந்தக் கொழந்தையேயேயேயேயே.... நீங்க தான் சார்ர்ர்ர்ர்ர்ர்!!!!!!!!!!

கதை கேக்கறதுன்னா சின்னப்புள்ளைல இருந்தே நம்ம எல்லாருக்கும் புடிச்ச விஷயம்... அதுனால தான் போர்பந்தர்ல இருந்து போயஸ் கார்டன் வரைக்கும் குட்டிக் கதைக்கு தனி மவுசு...

கத கேக்கறது தான் ஜாலியே தவிர கத சொல்றது இருக்கே.. யப்பா அது பெரிய கொடுமை... அதுலயும் சின்னப் பசங்களுக்கு கத சொல்றது இருக்கே அது உலகமகா டார்ச்சர்...

துபாய் கிரவுண்டயே மூத்தர சந்தா நெனச்சுகிட்டு, மூச்சு தெணற தெணற அடிச்சு அஸ்வின அழவச்ச மேக்ஸ்வெல் மாதிரி... கேப்பே விடாம கேள்வி மேல கேள்வி கேட்டு நம்மள கேஜ்ரிவால் ஆக்கி, கால்கிலோ கரியையும் பூசிடுவாங்ய.. இல்லன்னா  "இதுல எப்டிண்ணே எரியும்..... போங்கண்ணே..."னு பெட்ரொமாக்ஸ் செந்தில் மாதிரி ஒரே கேள்வில நம்மள‌ Fuse போக வச்சிருவாங்ய...

மொத்தத்துல நமக்கு செய்கூலி இல்ல... ஆனா 'சேதாரம்' உண்டு...

நம்ம Friend ஒருத்தர் போன வாரம் ஒரு forward message அனுப்பி இருந்தாரு...இதே மாதிரி ஒரு experience எனக்கும் நடந்துச்சு... தெரியாத்தனமா ஒரு சின்னப்பயலுக்கு கத சொல்லப் போயி நான்பட்ட பாடு இருக்கே... அவனுக்கு நான் சொன்ன கத இதாங்க...

ஒரு காட்டுல ஒரு சிங்கம் இருந்துச்சாம்.. அது அந்தக் காட்டுக்கே தலைவன்.. அது ரொம்ப நல்ல சிங்கமாம்.. அதுக்கு ஒரு குட்டிப் பையன்... அந்த ராஜா சிங்கத்துக்கு ஒரு தம்பி... அது ரொம்ப கெட்ட் சிங்கம்.. எப்புடியாச்சும் அண்ணன போட்டுத்தள்ளிட்டு தான் ராஜா ஆகிடணும்னு அதுக்கு ஒரு எண்ணம்... நெனச்ச மாதிரியே சூழ்ச்சி பண்ணி அண்ணன் சிங்கத்த கொன்னுட்டு தான் ராஜா ஆகிடுச்சாம்... அந்த குட்டி சிங்கத்த காட்டவிட்டே வெரட்டிடுச்சாம்... குட்டிசிங்கம் வளர்ந்து பெரியாளாகி தான் Friends கூட சேர்ந்து காட்டுக்கு திரும்பிவந்து தான் சித்தப்பாவ பழிவாங்கி தானே மறுபடி ராஜா ஆகிடுச்சாம்... இதான் கத...

சொல்லி முடிச்சதும் மேலேருந்து கீழ வரைக்கும் பாத்துட்டு... "இதான் சிங்கம் கதயா ? " அப்டின்னான்...  எங்க சிங்கம் கதைல அனுஷ்காவே வரலன்னு கேப்பானோன்னு நமக்கு வந்த பயத்த வெளிய காட்டிக்காம... "ஏன்டா? அப்டின்னேன்..

ஆனா அவன் நான் கொஞ்சம் கூட எதிர்பாக்காத ஒரு குண்ட தூக்கி போட்டான்... "சிங்கம் கத சொல்றேன்னு சொல்லிட்டு படையப்பா கத சொன்னா கேள்வி கேக்காம என்ன செய்வாங்க...?"

"டேய்.. என்னடா சொல்ற...?"

" ஆமா.. சிவாஜி..  சிவாஜின்னு ஒரு சிங்கமாம்.. அது ஊருக்கே தலைவனாம்... அதுக்கு மணிவண்ணன்னு ஒரு தம்பி சிங்கமாம்.. அது ரொம்ப கெட்ட சிங்கமாம்.. சிவாஜி சிங்கத்துக்கு ரஜினி.. ரஜினின்னு ஒரு குட்டி சிங்கமாம்... மணிவண்ணன் சூழ்ச்சி பன்னி சிவாஜிய கொன்ன்னுட்டு ரஜினிய வீட்ட விட்டு வெரட்டிட்டாராம்... வீட்ட விட்டு போன ரஜினி சிங்கம் ரமேஷ் கண்ணா, செந்தில்னு தான் Friends கூட திரும்பி வந்து சித்தப்பாவ பழிவாங்கி வீட்டுக்கே ராஜா ஆயிட்டாராம்... இந்த கத எனக்கு தெரியாதா??... படையப்பா படத்த சிங்கம் கதன்னு ரீல் விடாத...."

இதுக்கு மேல ஒரு அடி விழுந்துச்சு.... சேகர் செத்துருவான்னு அந்த சின்னப்பயகிட்ட இருந்து எஸ்கேப் ஆனேன்...

உண்மையில நான் அவனுக்கு சொன்னது 1994 ல வெளிவந்து சக்கபோடுபோட்டு, 4 Golden Globe award, Grammy Award for best Music னு விருதுகளையும் அள்ளிக் குவிச்ச,  "The Lion King", Hollywood Animation படத்தோட கதை... இதெப்படி நம்மூர்லன்னு பயங்கர யோசனை..."ஒரு (சிங்கிளா வர்ர) சிங்கமே... சிங்கம் கதைய... காப்பியடிக்கிரதே... ஆச்சர்யக்குறி!!!!!


ஓ... அதுனால தான் அதுக்கு முந்தின படத்துலயே "சிங்கம் ஒன்று புறப்பட்டதே....."ன்னு சிம்பாலிக்கா பாட்டு வச்சியா தலைவா.....கலக்கிட்ட தலைவா ...கலக்கிட்ட தலைவா ... " அப்டின்னு மண்டைக்குள்ள ஒரு கொறளி சத்தம்... அப்ப தான் எனக்கு இன்னொரு பொறி தட்டுச்சு...

"தலைவா" அப்டின்னாலே  (பல படத்து ) கலக்கல் தானே... அப்டின்னு யோசிக்க ஆரம்பிச்சு......

சத்யராஜ், சத்யராஜ்னு ஒரு ஊர்ல ஒரு சிங்கமாம்... அது நல்ல சிங்கமாம்... அது ஒரு கூட்டத்துக்கே தலைவனாம்... அதுக்கு விஜய் விஜய்னு ஒரு குட்டி சிங்கமாம்..  பெரிய சிங்கத்துக்கு பொன்வண்ணன்.. பொன்வண்ணன்னு ஒரு தம்பி சிங்கமாம்... தம்பி சிங்கம் அண்ணன் சிங்கத்த கொன்னுட்டு அந்த எடத்துக்கு தான் வந்துருச்சாம்... அப்போ ஆஸ்திரேலியா ஓடிப்போன குட்டி சிங்கம் தான் Friends கூட திரும்பி வந்து சித்தப்பாவ பழிவாங்கி கூட்டத்துக்கே தலைவன் ஆகிடுச்சாம்...

ரெண்டு பேங்கு.. ரெண்டு ஏஜெண்ட்டு... மாதிரி, ரெண்டு சிங்கம்... ரெண்டு சினிமா... (ஸ்ஸ்ஸ்ஸ் அப்ப்பா இப்பவே கண்ணக்கட்டுதே... கார்ட்டூன் படத்தையெல்லாமா காவு வாங்குவீங்க..)...

அதுசரி, "I am sam" படத்த ஸ்வெட்டரோட சேத்து சுட்டவங்யளாச்சே நாங்க... சிங்கம் கதைய சுடமாட்டோமா...

இப்படி ஒரு கதைய பலபேர் எடுத்தது ஒருபக்கம் இருக்கும்போது, பல கதைய ஒருத்தர் எடுத்துப்புட்டாருன்னு ஒரு மேட்டரு...

ரெண்டு வாரத்துக்கு முந்தின ஒரு பத்திரிக்கைல, கதாசிரியர் கலைஞானம், தேவர் மகன் படத்தோட கதை என்னோடது தான், ஒரு சமயம் கமல்கிட்ட ஒரு கதையோட Outline சொன்னேன்.. அத அடிப்படையா வச்சுகிட்டு தேவர் மகன் படத்த கமல் எடுத்தாருன்னு ஒரு செய்திய உட்ருக்காரு...

ஏற்கனவே இந்த கதை என்னோடதுன்னு இசையமைப்பாளர் கங்கை அமரன் வேற சொல்லிருக்காரு... இது கமல் கதையா? கலைஞானம் கதையா? கங்கை அமரன் கதையா?

சரி இத கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுவோம்...

கமல் வேணும்னா கடவுள் பாதி... மிருகம் பாதி கலந்து செஞ்ச கலவையா இருக்கலாம்... ஆனா அவர் படங்கள் "Crazy" கொஞ்சம்...  "Angrezi" கொஞ்சம் கலந்து செஞ்ச கலவை அப்டிங்கறது ஒரு பொதுவான விமர்சனம்...


உதாரணத்துக்கு....

The Witness.. படத்துல இருந்து "சூரசம்ஹாரம்"
God Father...  படத்துல இருந்து "நாயகன்"
She devil..  படத்துல இருந்து "சதி லீலாவதி"
9 to 5... படத்துல இருந்து "மகளிர் மட்டும்"
Bachelor.. படத்துல இருந்து "பம்மல்.கே. சம்பந்தம்"
Planes, Trains and Automobiles..  படத்துல இருந்து "அன்பே சிவம்"
Very bad things...  படத்துல இருந்து "பஞ்ச தந்திரம்"
Mrs.Doubt fire... படத்துல இருந்து "அவ்வை சண்முகி"
What about Bob?... படத்துல இருந்து "தெனாலி"

இப்படி  கமல் ஆங்கிலத்துல இருந்து "கட்டிப்புடி வைத்தியம்" பண்ணுன.. (I mean "ஆங்கில படத்தின் தழுவல்" அப்டிங்கிறத கமல் பாணில சொன்னேம்பா) ஏகப்பட்ட உதாரணங்கள் இணையத்துல கொட்டிக் கெடக்கு... பின்ன... "உலக"நாயகன்னா சும்மாவா??...

ஆனா ஒரு விஷயம் ரொம்ப முக்கியமானது... எட்டணா தேங்கா முட்டாய அப்படியே எடுத்து Eclairs Cover சுத்தி விக்கிற ஆசாமி இல்ல கமல்..  மூலக்கதைல‌, கம்யூனிசம், பெரியாரிசம், தமிழிசம், செக்யூலரிசம், ஃபெமினிசம் குறிப்பா கமலிசம் இப்படி ஊருல உள்ள எல்லா இசத்தையும் ரெவ்வெண்டு கரண்டி எடுத்து கலந்து, மேற்கொண்டு காமெடிய சதும்ப ஊத்திக் கலக்கி, அன்னைக்கி தேதிக்கி ராஜாவோ, ரகுமானோ இல்ல யார் பாப்புலரோ அந்த ஆள் மியூசிக்குல நச்சுனு 5 பாட்ட வாங்கி அதையும் போட்டு, ஜாதி சங்க தலையீடு, மதத் தலைவர்கள் பிரச்சனைன்னு தாளிச்சு இந்த மொத்த இசத்தின் ரசத்த தான் கமல் படமா வெளில ஊத்தி விடுவாரு...

எந்தக் கதையும், கதாசிரியரும், இயக்குனரும் கமல் படம்னு ஒண்ண‌ உருவாக்க நெரைய Compromise பண்ணியாகனும்... சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லணும்னா... "கதையில ஹீரோயின் தாலிபான் தீவிரவாதியோட பொண்ணா இருந்தாலும், அவளுக்கு "இந்து" னு மட்டுமே பேர்வைக்கிற சுந்தர்.சி கூட அன்பே சிவத்துக்காக பல படிகள் இறங்கி வரவேண்டி இருந்தது... இதோட End Result என்னன்னா, கமல் நடிக்கிற எந்தக் கதையும் திரையில பாக்கும் போது கமல் படமா மட்டுமே தெரியும்...

இத ஆத்து ஆத்துன்னு ஆத்திட்டு இருக்கும் போதே எனக்கு மறுபடி பொறி தட்டுச்சு...

சிவாஜி.. சிவாஜின்னு ஒரு சிங்கமாம்.. அது ஊருக்கே தலைவனாம்... அது ரொம்ப நல்ல சிங்கமாம்.. அதுக்கு கமல்.. கமல்னு ஒரு குட்டி சிங்கமாம்... சிவாஜி சிங்கத்துக்கு காகா ராதாகிருஷ்ணன்னு ஒரு தம்பி சிங்கமாம்... அவங்க குடும்பமே ரொம்ப மோசமாம்... குட்டி சிங்கம் உலக லெவல் சிங்கம் அப்டிங்கிறதுனால, சித்தப்பா கூட மோதாம அவுக பையன் கூட மோதி ஜெயிக்குது...

நடுவுல மானே தேனே பொன்மானே மாதிரி, "நான் கள்ளனில்ல மறவன்.."னு வசனம் பேசுறது, கோயில்ல பூட்ட ஒடச்சு வச்சி பகுத்து அறியிறது, கவுதமியோட ஊர சுத்துறது... களத்துல கம்பு சுத்துறது... ரேவதி கழுத்துல பூவ சுத்துறது..... மொத்ததுல எனக்கு தலையே சுத்துறது.... ஆஆஆஆஅ அபிராமி அபிராமி (யோவ்... அது விருமாண்டி பட கதாநாயகிய்யானு நீங்க திட்டுறது கேக்குது... இருந்தாலும் இத சொல்லலைன்னா டயலாக் முடியாதுல்ல...)

இப்படியெல்லாம் போட்டுக் கலக்கிட்டா நம்ம கார்ட்டூன் கத கூட கமல் கதையாகிடும்...

ஆக... மூணு பேங்கு... மூணு ஏஜென்ட்டு...      மூணு சிங்கம்.... மூணு சினிமா.... (ஸ்ஸ்ஸ்ஸ் ஓவரா கண்ணக் கட்டுதே....)

இதே நெலம நீடிச்சா ஹீரோவுக்கு கதசொல்ல வர்ர கதாசிரியர் இப்பிடித்தான் கதய சொல்லி ஆகணும்...

ஒரு காட்டுல ஒரு சிங்கம் சார்... அந்த சிங்கத்துக்கு ஒரு கொழந்த பொறக்குது...... அந்தக் கொழந்தையேயேயேயேயே.... நீங்க தான் சார்ர்ர்ர்ர்ர்ர்!!!!!!!!!!

No comments:

Post a Comment