Thursday, August 21, 2014

ஐ யாம் பிட்டீன் லாக் ஓனர்!!!

நாளை உலகம் இல்லை என்றானால்னு லவ் பேர்ட்ஸ் படத்துல ஒரு பாட்டு வருமே, அது மாதிரி போன வாரம் திடீர்னு ஒரு கனவு... "நாளை IT இல்லை என்றானால்" அப்டின்னு...

இல்லைன்னா என்னாகும்?? ஷாப்பிங் மாலுக்கெல்லாம் வேலை இல்ல... Mayajal, Cine planet க்கு வேலை இல்ல... Weekend பர்ச்சேஸுக்கு வேலை இல்ல, KFC, Subway, Domino's வகையறாக்களுக்கு வேலை இல்ல... Snow Bowling, Gokarting கிளப்புக்கெல்லாம் வேலை இல்ல...  "I like the way you are carrying yourself"னு புதுசா வந்த அப்பரசண்டிகிட்ட கடலைய போட டீம் அவுட்டிங்குக்கு வேலை இல்ல....

இவ்வளவுக்கும் வேலை இல்லன்னு சொன்ன நமக்கே வேலை இல்லையேன்னு எந்திரிச்சு உக்காந்ததுக்கு அப்புறம் தான் மூளைக்கு உறைக்குது...

இதெல்லாம் இல்லாம போனாலும் home loan, personal loan, mobile bill, cable connection, internet bill னு மூச்சு தெணற தெணற அடிக்கிற கடனெல்லாம் அப்டி அப்டியே இருக்குமே.. கிரிகாலா எப்படிடா சமாளிக்க போறன்னு ஒரே திங்கிங்...

கனவு கண்டு எந்திரிச்ச உடனே தான் மனுசப்பய மூளை "வாங்கஜி, வாங்கஜி"ன்னு ஃப்ரெஷ்ஷா இருக்கும்... சரி அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்க ஆரம்பிச்சு.. ஓகே... பீசா கார்னர் ஆரம்பிக்கலாம்னு ஒரு ஐடியா...(பிச்சை எடுக்குற நெலமை வந்தாலும் பீசாவையும் நம்மளையும் பிரிக்க முடியாதே..) அப்புறம் தான் தோணிச்சு பைசாவே இல்லைன்னா எவன்டா பீசாவ திங்க வருவான் அப்டின்னு...

சரி அதவிடு, வேற என்ன செய்யலாம்னு ஆரம்பிச்சு பார்பர் ஷாப்புலேர்ந்து பானிபூரி வண்டி வரைக்கும் யோசிச்சு ஒண்ணுமே செட்டாகாதுன்னு போயிட்டு இருக்கும்போது தான் டி.வில "மரியாதை ராமண்ணா" தெலுங்கு படம் ஓடிகிட்டு இருந்துச்சு... அத பாத்த உடனே பளிச்சுனு மைண்டுல ஒரு யோசனை... நாம ஏன் ஒரு மாட்டு பண்ணை ஆரம்பிச்சு பால் பிசினஸ் பண்ணக் கூடாது அப்டின்னு... சின்ன வயசுல எக்ஸாம்ல வாங்குன மார்க்க பாத்துட்டு அப்பா வேற "நீயெல்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்கு"ன்னு சொல்லிருக்காறேன்னு ஸ்ட்ரைக் ஆச்சு...

நமக்கு பேரு வச்சப்பவே இதெல்லாம் யோசிச்சு தான் வச்சிருப்பாங்யளோன்னு ஒரு டவுட்டு எனக்கு எப்பவுமே உண்டு.. இருந்தாலும், சரி பால் பிசினஸ் ஆரம்பிச்சு அண்ணாமலை ரஜினி மாதிரி ஆயிடலாம்னு தீர்மானம் போட்டாச்சு...

அப்புறம் என்ன? முழிச்சுகிட்டே ட்ரீம்ஸ் தான்..... பத்து வருஷமா ப்ராஜக்டுல டார்ச்சர் குடுத்த எல்லாரையும் மனசுக்குள்ள சரத்பாபுவா நெனச்சுகிட்டு... "இந்த நாள்.. உன் டைரில குறிச்சு வச்சுக்கோ"னு தொடைய தட்டி சபதம் எல்லாம் போட்டு கொண்டாடியாச்சு...


அடுத்து என்ன... planning தான்... ஒரு மாடு 20 ஆயிரம்... பத்து மாடு வாங்குனா 2 லட்சம்...

தீவனம் இதெல்லாம் ஒரு மாசத்துக்கு 25 ஆயிரம்னாலும் வருஷத்துக்கு 3 லட்சம்...

அதுபோக இந்த மாட்டையெல்லாம் பாத்துக்கிற ஆளுங்க ரெண்டு பேருக்கு சம்பளம் ஒரு வருஷத்துக்கு ஒண்ணேகால் லட்சம்...

ஆகமொத்தம் ஒரு வருஷத்துக்கு ஆறேகால் லட்சம் முதலீடு...

 ஒரு லிட்டர் பால் 42 ரூவா.. ஒரு நாளுக்கு பத்து மாடும் சேர்ந்து 100 லிட்டர் கரந்தாலும் 4200 ரூவா... மாசத்துக்கு ஒண்ணேகால் லட்சம்... அப்ப வருஷத்துக்கு கிட்டத்தட்ட 15 லட்சம்....

இது போக மாடு குட்டி போட்டா அது தனி லாபம்....

15 லட்சமா... ஐய்யோ... ஐ யாம் பிட்டீன் லாக் ஓனர்.... இந்த தெரு என்ன வெலைன்னு கேளுடா... கொறஞ்ச பட்சம் இந்த ரோடாவது என்ன வெலைன்னு கேளுடான்னு மனசு அரியானா லாட்டரி அடிச்ச கவுண்டமணி மாதிரி ஒரே அலப்பரை..


சரி நம்ம திட்டத்த யாருகிட்டயாச்சும் சொல்லி ஆலோசனை கேக்கலாமேன்னு நெனச்சப்பதான் ஊர்ல இருந்து அப்பாவும் அம்மாவும் வந்தாங்க... இதுக்கு நடுவுல ட்ரீம்ஸ்ல அண்ணாமலை ரஜினி பணக்காரர் ஆகி குடும்பத்தோட உக்காந்து குலாப் ஜாமூன் அடுக்கிட்டு இருக்காரு...

விக்ரமன் சார் படத்துல வர்ர மாதிரி ஃபேமிலி சாங் வேற... ஆனா எனக்கு அப்போ தெரியாது அது கிளைமாக்சுக்கு முன்னாடி வர்ர சாங் அப்டின்னு...

சரி, ஈன்ற பொழுதின் பெரிதுவக்க போற தாய் ஆச்சேன்னு நம்ம திட்டத்த explain பண்ணுனா....

 "அட கூறு கெட்டவனே.. எந்த மடப்பயடா உனக்கு இந்த ஐடியாவ சொல்லிக்குடுத்தவன்"னு சொல்லி சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க...

"சரி சிரிச்சது போதும்... என்ன குற்றம் கண்டாய்... சொற்குற்றமா அல்லது பொருட்குற்றமா"ன்னு வெவரத்த கேட்டதுக்கு... என்கிட்ட சொன்னத ஊர்ல எவன் கிட்டயாச்சும் சொல்லியிருந்தா "தம்பி என்ன ஜெயில்ல இருந்துட்டு வறீங்களா??? "ன்னு தான் கேட்பான்"னு மேலும் சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க...

But whyyyyyyyyy?

அதுக்கு காரணத்தையும் அவங்களே சொல்ல ஆரம்பிச்சாங்க... "பின்ன என்னடா... நீ ஊரவிட்டு சிட்டிக்கு வந்து பத்து வருஷத்துக்கு மேல ஆச்சு... இன்னிக்கு நெலவரம் என்னன்னு தெரியாம கதைய உட்டுகிட்டு இருக்க...

1) 10 மாடு வாங்க திட்டம் போட்டியே... மாட்ட வாங்கி எங்க கட்டுவ????? அதுக்கு எடம் வேணாமா??? அதுக்கு  lease advance எவ்ளோ தெரியுமா???

2) இன்னிக்கு தேதிக்கு கிராமத்துல பெரிய டிமாண்டே வெக்கலுக்கு தான்... யாரும் கையால அறுவடை செய்யிறதில்ல... எல்லாமே மிஷின் அறுவடை தான்... மிஷின்ல அறுவடை செஞ்சா வெக்கல் எல்லாம் செதைஞ்சு போயி கூளம் ஆயிடும்.. கூளத்த மாடு திங்காது...

3) Cattle Feed எல்லாம் யாரும் காசு குடுத்து வாங்குறது இல்ல... ஏன்னா வாங்குற வெலையில எதுவும் இல்ல...

4) எள்ளு புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு எல்லாம் இப்போ ரொம்ப டிமாண்ட்... ஏன்னா நல்லெண்ணெய், கடலை எண்ணெய் எல்லாம் கொழுப்புன்னு சொல்லிட்டு,  எல்லா பயலும் சூரியகாந்தி எண்ணெய், தவுடு எண்ணெய்னு சாப்புட ஆரம்பிச்சுட்டாங்க.. எள், கடலை ஆட்டுறதும் அதனால ரொம்ப கொறைஞ்சு போச்சு..

5) முந்தி எல்லாம் மாட்ட காலைலயே மேய்ச்சலுக்கு அனுப்புவாங்க.. அதுக்குன்னு மந்தை வெளின்னோ அல்லது மேய்ச்சல் புறம்போக்கு அப்டின்னோ ஊருக்கு ஒரு எடம் இருக்கும்... இப்பொ குளம், வயல் எல்லாமே ரியல் எஸ்டேட்டாவும், பெட்ரோல் பங்காவும், கல்யாண மண்டபமாவும் மாறும்போது மேய்ச்சல் வெளியாவது ஒண்ணாவது...

6) தீவனப் புல்லுனு அதை வயல்லயே வெளைய வச்சு போட்டாத்தான் உண்டு.. அதுக்கு பதில் நெல்லோ, உளுந்தோ, கரும்போ போட்டா அதுக்கு மார்க்கெட்டுல வெலை அதிகம்னு புல்லை எல்லாம் யாரும் consider பண்ணவே மாட்டாங்க...

7) மாட்ட குளிப்பாட்டி, சாணி அள்ளி சுத்தம் பண்ணி, அதுக்கு தவுடு புண்ணாக்கு வச்சு பாத்துக்கிறதுக்கு ஆளு இல்ல...   உள்ளத சொல்லணும்னா, ஊருக்குள்ள வெவசாயம் பண்ணவே ஆளு கெடைக்கல... படிச்சவனெல்லாம் ஐ.டி கம்பெனிக்கு ஓடி போயிட்டான்.. சும்மா இருந்தவனெல்லாம் திருப்பூருக்கு பனியன் கம்பெனிக்கு ஓடி போயிட்டான்..

8) இதுபோக "கோமாரி"னு ஒரு வியாதி வந்து ஒரே வருஷத்துல ஆயிரக்கணக்குல மாடுங்க செத்துபோச்சு.. நீ பண்ணையெல்லாம் வைக்கணும்னா அதுக்கு தனியா ஒரு வெட்னரி டாக்டர வச்சுக்கணும்...

9) அதுபோக மாட்டுக்கெல்லாம் இன்சூர் பண்ணி, தோடு குத்தி அதுக்கு இன்சூரன்ஸ் பணம் வேற கட்டணும்...

10) அவ்வளவு ஏன்? கவர்மெண்டு சும்மாவே மாடு குடுக்குது.. அதையே வாங்கி வச்சு மெயின்டெயின் பண்ணமுடியாம, கேரளாவுக்கு ஏத்திவுட்டு காச வாங்கி சரக்கடிச்சிடுறான் நம்மாளுக... இவ்வளவு பிரச்சனை இருக்கு பண்ணை வக்கிறாரம் பண்ணை... ஏன்டா ஊர்லயே இருக்குற எங்களுக்கு இது எல்லாம் தோணாமலே போயிருக்கும்னு நெனச்சியா??னு ஒரு பெரிய lecture குடுத்து முடிச்சாங்க...

"அப்போ என்ன பத்தி அப்பா கண்ட கனவ எப்படி நான் நெறைவேத்துறது????" (ஆமா.. பெரிய IAS ஆயிடுவன்னா கனவு கண்டாரு??)

அதுக்கும் அவங்க ரொம்ப சீரியசா ஒரு பதில சொன்னாங்க...."நல்ல்ல்லா யோசிச்சு பாரு.. நீ மாட்டு பண்ணை வைக்க லாயக்குன்னா சொன்னாரு?? நீயெல்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்குன்னு தான் சொன்னாரு..."

அது வரைக்கும் மைண்டுல ஓடிகிட்டு இருந்த super star படம், மெதுமெதுவா fade out ஆகி... நம்ம பெயிண்டர் ராஜேந்திரன் "வேல்பாண்டி" கெட்டப்புல வந்து ஒரு பஞ்ச் அடிச்சாரு பாருங்க........


No comments:

Post a Comment