Saturday, July 26, 2014

இங்கு மொத்தமாகவும் சில்லறையாகவும் கடலை வறுக்கப்படும்!!!!!!

ஏழெட்டு வருஷத்துக்கு முந்தி ஐ.டில ஆட்டுமந்தை மாதிரி ஆளெடுத்தபோது வேலைக்கு சேர்ந்துட்டு, இன்னிக்கு "நீ புடுங்குறது எல்லாமே தேவையில்லாத ஆணி தான்"னு அப்பரசண்டிகள வெரட்டுற ஆட்கள்ள பெரும்பாலான பேர, அவங்களோட ஆரம்ப காலத்துல ரொம்ப 'பிசி"யா வச்சிருந்த ஒரு பேரு "ஆர்குட்".

உலக Social Network வரலாற்றில் முதன் முறையாகன்னு ஆரம்பிச்சு சில வருஷங்களுக்கு முந்தி வரைக்கும் ஓஹோன்னு பட்டைய கெளப்பிகிட்டு இருந்த "Orkut" தளத்த செப்டம்பர் மாதத்தோட மூடப்போறதா கூகுள் நிறுவனம் அறிவிச்சதுல இருந்து நம்மாளுங்களும் பழைய போட்டோவையெல்லாம் Download பண்றதுல தீவிரமா எறங்கிட்டாங்க... அதோட சேர்ந்து பழைய நினைவுகள்ளையும் எறங்கி பலரும் நெட்டுல பிரியாவிடை குடுத்துட்டு இருக்காங்க... நாமளும் கொஞ்சம் ஜாலியா அத திரும்பி பாக்கலாம்...

சமகாலத்துல ஆரம்பிக்கப்பட்டதா இருந்தாலும் ஃபேஸ்புக்கோட அனாடமி புரியறதுக்குள்ள ஆர்குட்ல இமயம் முதல் குமரி வரை தன்னோட கொடிய நாட்டிகிட்டுருந்தாங்க நம்மாளுங்க.. அதுக்கு சில சுவாரசியமான காரணங்கள் உண்டு...

விலையில்லா மின்கலக்கி, மின் அரைவை இயந்திரம் மாதிரி, விலையில்லா கடலை வறுக்கும் வசதி.... ஒரு கூகிள்  அக்கவுண்ட் இருந்தா போதும், மொத்தமாகவும் சில்லறையாகவும் கடலைய வறுக்கலாம்...

அஞ்சலைன்னு பேரு இருந்தாலும் "ஏஞ்சல்"னு Profile  பேரு வச்சுகிட்டா எவனும் கேக்க போறது கெடையாது...

ஆர்குட்டோட முக்கியமான அம்சமே "Scrap" தான்...

அதுவரைக்கும் தெரிஞ்ச புள்ளைங்ககிட்ட மட்டும் எஸ் எம் எஸ்ல  நூல் வுட்ட‌ ஆளுங்க எல்லாம், ஆர்குட் புண்ணியத்துல தெரிஞ்ச புள்ள, தெரியாத புள்ளைன்னு  வகைதொகையில்லாம் ஏரியா பூரா யூரியா அடிக்கிற மாதிரி Scrap வாரி எறைக்க ஆரம்பிச்சாங்க... சில பேரு எழுதுவானுங்க பாரு...

" I am trying to find the teaspoon sugar which adds the real taste of life..." (ராஜா.. உன் Analysis என்னமோ நல்லா தான் இருக்கு... ஆனா இதையே எல்லா பொண்ணுங்க பேஜ்லையும் எழுதிவச்சியின்னா Dialysis ல தான் முடியும்...)

" I saw you visited my page.. would like to have my company." ( ஆமா.. இவரு அம்பானி தம்பி, கம்பெனில பாதிய குடுக்குறாரு...)

                                           
இன்னும் சில பேரு அடிக்கிற கூத்து பெருங்கூத்து... ஒரு வருஷத்துல லட்சம் Scrap அடிக்கணும்னு கணக்கு வச்சுகிட்டு தினமும் 1008 Scrap அடிச்ச ஆளெல்லாம் உண்டு... (ராசா.. டெய்லி 1008 தடவை எழுதுறதுக்கு அது என்ன ஸ்ரீராமஜெயமாடா???? ).. இன்னும் சில பேரு Good Morning அப்டிங்கிறதையே ஒவ்வொரு எழுத்தா பிரிச்சு 11 Scrap போட்டு லொள்ளு பண்ணுவாங்ய..

சின்ன வயசுல இருந்தே Rough  நோட்டு,  பஸ், School Toilet செவுருன்னு ஒரு எடம் விடாம கிறுக்குறது நம்மாளுங்களுக்கு ரொம்ப புடிச்ச விஷயமாச்சே.. அப்படி இருந்தவன இன்டெர்நெட்டுல கிறுக்கு ராசான்னு சொன்னா சும்மா இருப்பாங்யளா... சரோஜா தேவி சோப்பு டப்பா கெடச்ச மாதிரி  மொத்தமா பாஞ்சு ஆளாளுக்கு  "சமூக"  சேவைய ஆத்து ஆத்துன்னு ஆத்துனாங்க...

அதுக்கு முன்னாடி யாருக்காச்சும் நம்மளோட ஃபோட்டோவ காட்டணும்னா ஒண்னு ஈ மெயில் அனுப்பணும் இல்ல "Picasa" மாதிரி எதுலயாச்சும் அப்லோட் பண்ணி லிங்க் அனுப்பணும்... ஆர்குட் வந்தாலும் வந்துச்சு,   நம்மள தேடிவந்து ஃபோட்டோவ பாக்கவைக்க ஒரு சான்ஸ் கெடச்சதும், எல்லா பயலும் வளைச்சு வளைச்சு போட்டோவ போட்டு அளப்பரைய குடுக்க ஆரம்பிச்சாணுங்க.. 

அதோட நிக்காம, ஊர்ல ஒரு Profile விடாம போயி போட்டோவுக்கு கமெண்ட் வேற... அதுலயும் பொண்ணுங்க Profile னா இவனுங்க தொல்ல தாங்கமுடியாது.. கல்யாணம் ஆகிப்போனாலும் வெரட்டி வெரட்டி "இந்த பொண்ணையும் அந்த பையனையும் பாக்கும்போது தில்லானா மோகனாம்பாள்ல வர சிவாஜியும் பத்மினியும் மாதிரி இருக்கு"னு எதையாவது சொல்லலைன்னா தூக்கமே வராது...

ஆர்குட்டோட அடுத்த சிறப்பம்சம் என்னன்னு பாத்தா, "Testimonial"... அதாவது இவரு நல்லவரு, வல்லவரு நாலும் தெரிஞ்சவருன்னு சொல்றது... இன்னும் கரெக்டா சொல்லணும்னா ஸ்கூல்ல தமிழ் பாடத்துல ஆசிரியர் குறிப்புன்னு ஒண்ணு வருமே அதே மாதிரி தான்... பாட்ட எழுதுன ஆளு "எக்ஸ்ட்ரா முட்டை" போடுறாங்கனு சொல்லியும்  Elementary School வரைக்கும் கூட போகலைன்னாலும் "ஓதாது உணர்ந்த ஞானச் செல்வர்"னு எழுதுவோமே அதே தான்...

அஞ்சு வருசமா புராஜக்ட்ல டம்மியா மிச்சர் திங்கறத தவிர ஒண்ணும் பண்ணலைன்னாலும்... a wonderful person to have in the team.. i like her company..னு எழுதி வைக்கிறது தான் "டெஸ்டி" தர்மம் (நீயெல்லாம் இங்கிலீஷ் பேசலைன்னு யாரு கேட்டாங்க... அதென்ன கம்பெனி... கெக்ரான் மெக்ரான் கம்பெனி)..இதுல வாங்குன காசுக்கு மேல "வருங்கால அமெரிக்க ஜனாதிபதி முருகேசன் வாழ்க"னு கூவுற ஆளெல்லாம் உண்டு..

இந்த Testi பித்து தலைக்கேறி  "அப்பறம்.... இந்த வாரம் நம்ம பேஜ்ல Testi ஒண்ணு போட்ருங்களேன்"னு பப்ளிகுட்டி பண்ணிக்கிற அப்பாடக்கரெல்லாம் உண்டு... (தம்பி... அவன் என்ன LIC பாலிசியா போடப்போறான்.. நீ வாங்குற பத்து அஞ்சு பிச்சைக்கு இதெல்லாம் தேவதானா????)


ஆர்குட்டோட மற்றுமொரு சிறப்பம்சம் "Community".. அதாவது தனித்தனியா "சமூக சேவை" பண்ணிட்டு இருந்த ஆளுங்க எல்லாம் மொத்தாமா சேந்து "அதே" வேலைய பண்றது... (இல்லைன்னா மட்டும் என்ன சுத்த சமய சமரச சன்மார்க்க ஆராய்ச்சியா பண்ணப்போறானுங்க...)

ஆரம்பத்துல இந்த Community எல்லாம் தனிப்பட்ட வி.ஐ.பிக்களுக்கு வாழ்க / ஒழிக போடுறதுக்கு தான் ஆரம்பிச்சானுங்க.. அக்பர் ரோடு சோனியாவுல இருந்து ஐதராபாத் சானியா வரைக்கும் எல்லாருக்கும் ஆரம்பிச்சும் வெறி அடங்காம‌ அடுத்து என்ன என்னன்னு யோசிக்க ஆரம்பிச்சதன் விளைவு... Cosmetics ல இருந்து கட்டன் சாயா வரைக்கும், பல்சர் பைக்குல இருந்து பருப்பு வடை வரைக்கும் கண்ட கருமத்துக்கும் Community ஆரம்பிச்சு தள்ளிட்டாங்ய...

இதுல இன்னும் சில சுவாரசியமான விஷயங்கள் உண்டு.. ஓயாம நெட்ட நோண்டி,  எதாச்சும் ஒரு புள்ளையோட Community லிஸ்ட்டுல இருக்குற ஐட்டத்த எல்லாம் பாத்துட்டு, மறுநாள் அந்த புள்ளைகிட்ட போயி..

" I know you like south indian coffee.. கரெக்டா???... எப்படி கண்டுபுடிச்சேன் பாருங்க..."ன்னு சீன் போட்ட ஆளுங்க ரொம்ப பேரு... (ஆமா இவரு எடிசன்.. கரண்ட கண்டுபுடிச்சுட்டாரு...)...

இதை எழுதும்போது இன்னொரு விஷயம் நினைவுக்கு வருது.. இதே மாதிரி நம்ம நண்பர் ஒருத்தர், அவரு ஓயாம வெரட்டிகிட்டு இருந்த ஒரு பொண்ணோட Community லிஸ்ட்டுல Roller skating னு இருக்குறத பாத்துட்டு அந்த பொண்ணுக்கு Roller skating ரொம்ப புடிக்கும் போலருக்குன்னு நெனச்சுகிட்டு, அத இம்பிரெஸ் பண்றதுக்காக நம்ம ஊரு முட்டுசந்துல Roller skating பண்ணி குப்புற விழுந்து மூக்கு வாயெல்லாம் மண்ணு உட்டுகிட்டாப்ல...

பின்னால தான் தெரிஞ்சது "அந்தப் புள்ளைக்கும் Roller skating கும் சம்பந்தமே இல்ல.. அதோட தம்பி தான் சும்மனாச்சுக்கும் அத Add பண்ணி வச்சிருந்தான்" அப்டின்னு....

இதெல்லாம் பண்ணி முடிச்சு போரடிச்ச ஆளுங்க ஆரம்பிச்சது தான் "I Hate" Community... மூணு நாளுக்கு முந்தி வச்ச பருப்பு கொழம்புல இருந்து முப்பது ரூவா கடன் கேட்டு குடுக்காத ரூம்மேட் வரைக்கும் புடிக்காத எல்லாத்தையும் கழுவி கழுவி ஊத்துற‌து தான் இந்த Community யோட வேலையே...
                                   
இதுல ரொம்ப பிரபலம் "I hate peter girls" Community..........    பீட்டர் உடுற பொண்ணுங்கள, ஆங்கிலத்தாலோ அல்லது அது வராமல் போனதாலோ பாதிக்கப்பட்ட ஆடவர்குல சிங்கங்கள் கேவலமா திட்டுறதுக்கு இந்த Community ஒரு தளம்... இதுக்கு பதிலடி குடுக்குறதுக்குன்னே ஆரம்பிக்கப்பட்டது "I hate flirting guys.." சதா சர்வ காலமும் எதாவதொரு பொண்ணுகிட்ட ஜொள்ளுவதையே பிறவிப்பயனா நெனச்ச பசங்கள மகளிர்குல மாணிக்கங்கள் ரொம்ப ரொம்ப கேவலமா திட்டுறதுக்கு இந்த Community ஒரு தளம்...  மொத்ததுல இத ரெண்டுபேருமே ஒரு ஜாலியாவே எடுத்துக்கிறது...

இதெல்லாம் தனக்கு சம்பந்தமான விஷயம்னு ஓரளவுக்கு மன்னிச்சு விட்ரலாம்.. சம்பந்தமே இல்லாம எதாச்சும் ஒரு வீடியோவ Youtube ல இருந்து லிங்க் குடுத்து அதப்பத்தி ஒரு பத்துபேரு சேட்டிலைட் TV ல வர்ர‌ Talk Show லெவல்ல மாறி மாறி பொளந்தெடுப்பாங்ய பாரு.. அது உச்சக்கட்ட கொடுமை...

இப்படி ஒவ்வொருத்தருக்கும் எத்தனையோ நினைவுகள் ஆனா ஒவ்வொண்ணும் ரொம்ப ரொம்ப சுவாரசியமான நினைவுகள்... அதான் ஆர்குட்டோட பலமே...

இன்னைக்கு ஃபேஸ்புக்குல இருந்து ஓயாம Candy Crush, Farm heros, Criminal Case னு ஒரு பய விடாம debit card விக்கிறவன் மாதிரி request குடுத்து டார்ச்சர் பண்றது, Viber ல ஓசி கால் பேசுறது, Whatsapp ல ரேகைய அழிக்கிறதுன்னு எல்லாத்துக்கும் முன்னோடி "ஆர்குட்."

ஆர்குட்னு சொன்ன உடனே நினைவுக்கு வர்ரது அதோட சிம்பல்ல இருக்குற "O" தான்... கல்லூரி முடிஞ்சு பிரிஞ்சு போற ஒரு ஜாலியான நண்பன மாதிரி நாமளும் ஆர்குட்டுக்கு விடை கொடுக்கலாம்...

எப்பூடி..... ஆர்குட்டுக்கு ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய "O" போடலாம்....

Friday, July 18, 2014

நில்லுவே!!!! நில்லுவே!!!!!

சில வருஷங்களுக்கு முந்தி மெட்ராஸ் பஸ்ல ஒரு பாட்டு ஓடிகிட்டு இருந்திச்சு.. பாட்டக் கேட்டு ஒரு திருநெல்வேலி அண்ணாச்சி.."யாரவே.. இவன் நில்லுவே நில்லுவேங்கான்..."னு கேக்க.. பக்கத்துல இருந்தவரு "அண்ணாச்சி, அவன் நில்லுவேன்னு சொல்லல... "நிலவே நிலவே"ங்கிறத தான் அப்படி பாடிகிட்டு இருக்கான்னு வெளக்கம் சொல்லிகிட்டுருந்தாரு...

ஒரு ரியாலிட்டி ஷோவுல எஸ்.பி.பி சொன்ன சம்பவம்... அதுவும் ஒரு நிலா பாட்டு தான்... "நான் சினிமால பாட வாய்ப்பு தேடி அலைஞ்ச போது எம்.எஸ்.வி சார் கிட்ட ஒரு பாட்டு பாடி காமிச்சேன்... உனக்கு சங்கதி எல்லாம் நல்லா வருது.. ஆனா தமிழ் தான் கொலபண்ற மாதிரி இருக்கு.. மொதல்ல போயி தமிழ நல்லா கத்துக்கிட்டு வந்து அப்புறம் பாடுறதுக்கு வாய்ப்பு தேடுன்னு சொன்னார்.." அப்டினு சொன்னார்.. அந்த பாட்டு "ராமு படத்துல பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடின நிலவே என்னிடம் நெருங்காதே..."

SPB க்கு மட்டுமல்ல, இந்த பாட்ட ஒரிஜினலா பாடின‌ PBSக்கு கூட தாய்மொழி தமிழல்ல... அவ்வளவு ஏன் ஆதிகாலம் தொட்டு தமிழ் சினிமா பாடகர்கள் பெரும்பாலான ஆட்களுக்கு தாய்மொழி தமிழ் கிடையாது...

TMSக்கு தாய்மொழி சௌராஷ்டிரம்..PBSக்கு தாய்மொழி கன்னடம்...கண்டசாலா, .எம்.ராஜா, பி.சுசீலா, எஸ்.ஜானகி, SPB, மனோ, ஷைலஜா இவர்கள் அத்தனை பேருக்கும் தாய்மொழி தெலுங்கு... யேசுதாஸ், மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன்,கிருஷ்ணசந்தர்,சித்ரா, உன்னிமேனன், சுஜாதா, சுனந்தா, ஜென்சி இவர்களின் தாய்மொழி மலையாளம்...

ஆனால் TMS போல தமிழை உச்சரித்த பாடகர்கள் யாருமே இல்லைன்னு சொல்லலாம்... அவ்வளவு சுத்தமா தமிழ் உச்சரிப்பு இருக்கும்... அம்பிகாபதி படத்துல வர்ர "தமிழ் மாலை தனைச் சூடுவாள்.." ஒண்ணு போதும் இதுக்கு உதாரணம்...

TMS மட்டுமல்ல அதே போல தான் பாடும் நிலா பாலுவும்..

"ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி
இருவிழி மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி..."

வைரமுத்துவோடஇந்த வரிகளைக் கேட்கிற யாரும் நம்பமாட்டங்க SPBக்கு தாய்மொழி தமிழ் இல்லைன்னு.. "", "", "" வேறுபாட்ட அவ்வளவு சுத்தமா பிரயோகம் பண்ணிருப்பாரு...

யேசுதாஸ் கிட்டதான் வைரமுத்து கொஞ்சம் திண்டாடிட்டாரு...என்ன ஒத்துமை பாருங்க அதுவும் ஒரு நிலா பாட்டு தான்..

அவரு ஏற்கனவே "திருக்கோயிலே ஓடிவா" அப்டிங்கிறதயே "தெருக்கோயிலே ஓடிவா"னு பாடுனவரு... "பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா" பாட்டுல‌.."பில்லை நிலா"னு யேசுதாஸ் பாட.. மீண்டும் மீண்டும் வைரமுத்து திருத்த, ஒரு கட்டத்துல யேசுதாஸ் செம கடுப்பாகி "நான் சாகுற வரைக்கும் திருத்திகிட்டே இருப்பீங்களா"னு கேக்க.. அதுக்கு வைரமுத்து "இல்லை.. தமிழ் சாகாத வரைக்கும்.." அப்டினு சொன்னதா அவருடைய ஒரு புத்தகத்துல எழுதியிருப்பாரு..

அப்படிப்பட்ட வைரமுத்துவே மண்ட காஞ்சு போற அளவுக்கு ஒரு ஆளு ஒரு வேலைய செஞ்சுபுட்டாரு..

ஒரு ரெக்கார்டிங்குக்கு கொஞ்சம் காலதாமதமா வர்ராரு வைரமுத்து.. பாட்ட பாடி முடிச்சுட்டு ஏர்போர்ட்டுக்கு கெளம்பி போயிட்டாரு பாடகர்.. சரி ரெக்கார்டிங் முஞ்சா என்ன.. பாட்ட போட்டு காமிங்க கேப்போம்னு பாட்டக் கேட்க ஆரம்பிக்கிறாரு.. ரெண்டாவது சரணத்த கேட்டவருக்கு பொறி கலங்கிருச்சு.. "பிரியமான பெண்ணை ரசிக்கலாம்.. தப்பில்லே"னு இவர் எழுதியிருந்தத... "பெரியம்மா பொண்ணை ரசிக்கலாம்.. தப்பில்லே"னு பாடி வச்சுட்டு போயிருந்தார் அந்த பாடகர்.. அப்புறம் என்ன... அவர வெரட்டி புடிச்சு கூட்டிகியாந்து மறுபடி ஒழுங்கா பாடவச்சு அனுப்பியிருக்காங்க‌... அந்த பாட்டு "கண்ணெதிரே தோன்றினாள்" படத்துல வர்ர "ஈஸ்வரா.." பாட்டு தான்...

அவரு தான் இந்த பதிவோட தொடக்கத்துல நான் சொன்ன "நில்லுவே" பாட்டயும் பாடின "உதித் நாராயணன்..அந்த நில்லுவே "ரோமியோ ஆட்டம் போட்டால்" பாட்டுல வர்ர ஒரு வரி...

இவரோட தாய்மொழி போஜ்புரி.. தமிழச் சொல்றீங்களே.. இவரு இந்தியையே இந்த லட்சணத்துல தான் பாடுவாருன்னு அழுவுற சில அக்மார்க் டெல்லிவாலாக்கள் உண்டு..

இவர மொதல்மொதல்ல தமிழுக்கு தொண்டுசெய்ய கூட்டிகிட்டு வந்தது என்னவோ . ஆர். ரகுமான் தான்.. ஆனா பெரிய அளவுல படத்துக்கு படம் பாட்டு குடுத்து வளத்துவுட்ட புண்ணியத்தை கட்டிக்கொண்டவர்கள் இசையமைப்பாளர்கள் தேவாவும், வித்யாசாகரும்...

ஆரம்ப காலத்துல இவரு பாடுன "கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கடிச்சா" பாட்டுலயே பாதி புரியாது (அதுபோகட்டும்.. அண்ணே அது கடிச்சா இல்ல.. கெடச்சா)

.எம். ராஜா பாடும் போது லேசான ஒரு Nasal tone இருக்கும் ஆனா வார்த்தைகள் தெளிவா இருக்கும். ஆனா நம்மாளு முழுசுமே மூக்கால தான் பாடுவாப்ல.. என்ன ஒரு வித்தியாசம் பாதி பாட்டு என்னன்னே புரியாது... 

"சில்லோன்னு சிங்ள பொண்ணே சிணுங்காதே.. ஜில்லோன்னு ரொடியிருந்தா ஒதுங்காதே.." (என்ன சொல்ல வர்ராருன்னு கண்டுபுடிக்கிறவங்களுக்கு நலாஸ் ஆப்பக்கடை கூப்பன் பரிசு..)

"காஸ்ஸூ மேல்லே காஸ்ஸூ வந்த கொட்டுஹிர நேரமித்து... வாசக்கதுவ்வே ராஸ்ஸலச்சுமி தட்டுஹிர நேரமிது.. (சார்.. பெண் பாவம் பொல்லாதது... அதுவும் தமிழ், ராசலட்சுமினு ரெண்டு பேரு பாவம்...)

ஏரோப்பிளேன் பறக்குது பரு மேலே.. (யார்ரா அவன் பரு மேல ஏரோப்ளேன் உட்டவன்..)

புது வெஸ்ஸம் கட்டப் பொர்ரோம் .... புது வால்வை தேடி பொர்ரோம்.. (தெய்வமே.. அது வால்வு இல்ல வாழ்வு..)

ஹைலைட்டா ஒண்ணு உண்டு.. "நீ வாது தக்க ரொம்ப கெட்டிக்காரன்"... (சத்திய சோதனை...)

இதாச்சும் பரவால்ல ஹீரோ ஜாலியா பாடுற பாட்டுனு மன்னிச்சு விட்டுடலாம்.. "யெங்கேய்யோ பார்த்த மைக்கம்"னு இவரு பாடுற மாடுலேஷனுக்கும்.. படத்துல வர்ர எமோஷனுக்கும் துக்கிளியூண்டு சம்பந்தமும் இருக்காது..

இவரு னி ஆளு இல்ல‌.. ஆமா இவ மாதிரியே ஒரு பெரியகூட்டமே இருக்கு...

சுக்விந்தர் சிங்குனு ஒருத்தரு.. "நெதியே அடி நைல் நெதியே"னு பாடிருப்பாரே அவரே தான்.. அதே மாதிரி சுரேஷ் பீட்டர்ஸ்னு ஒருத்தர்... இவரு வாய்ஸ் ரொம்ப பிரம்...Constipation... Come to the motion.." தான் தாரந்திரமே...

மீபத்துலகூட சிவாஜி த்துலஒரு பாட்டு... இப்போ.. எத்தக் கூடாதஎடத்துலம்மழுதை ஓங்கி ஒரு எத்து எத்திருச்சுன்னு ச்சுக்கங்க‌.. அப்டியே வாயமூடி...கண்ணு பிதுங்கி ம்ம்ம்ம்ம்ம்க்க்க்க்க்ம்ம்ம்ம்ம். னு ஒரு முக்கு முக்குவோமே அப்டியே அதே வாய்சுலஅதே பிட்சுலபாடுங்க‌.. "ஒரு கூடை ன்லைட்.. ஒரு கூடை மூண்லைட்.." சூப்பரப்பு.. இந்த பாட்ட பாடுனவருக்கும் இது மாதிரி எதோ ஒரு சம்பவம் நடந்திருக்கணும்..

ஆண் பாடகர்களுக்கு கொஞ்சமும் சளைச்ச ஆளுங்க இல்ல பாடகிகள்...


அந்த காலத்துலயே "பேஷும் வார்த்தை... உண்மை தானா"ன்னு பானுமதியம்மா பாடும்போது நமக்கு லைட்டா "ஷங்கட்டமா" தான் இருக்கும்...

"ஷென்பாஹாமே.. ஷென்பாஹாமே"னு தமிழுக்கு வந்த ஆஷா போன்ஸ்லே, மீரா படத்துல "யேன் விரித்தாய் ஸெருஹை.."னு பிச்சு ஒதறி இருப்பாங்க.. சமீபத்தில கூட
மதுஸ்ரீ"மருதாணி விழியில் ஏன்" பாட்ட பாடிகாட்டு முனீஸ்வரனுக்கு காவு குடுத்திருப்பாங்க..

அவ்வளவு ஏங்க...12பி படத்துல ஒரு பாட்டு வரும் "சரியா தவறா"னு..  

பாட்டை எழுதுன மகானுபாவர் "நாங்க பச்சை பச்சையா கேள்விகள் கேட்டா சரியா தவறா"னு எழுதி இருக்காரு.. அத அந்த புள்ள "நாங்க பாச்சை பாச்சையா கேள்விகள் கேட்டால் சரியா தவறா"னு பாடியிருக்கும்..  

அடுத்த வரிதான் இன்னும் ஹைலைட்... "ஆண்கள் பார்த்தால் பரவசம் வருதே.." அப்டிங்கிறத "அங்க பாத்தா பரவசம் வருதே.."னு பாடும் பாருங்க‌.. (கேக்குற நமக்கே தல கிர்ருனு சுத்தும்...)

போன வாரம் ஒரு பேட்டில "தமிழை சாகாமல் காப்பாத்துற பொறுப்பு நம்மகிட்ட தான் இருக்கு"ன்னு வைரமுத்து அவர்கள் பேசி இருக்காரு..

எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் இவர்கள் எல்லாருக்குமே தமிழை சுத்தமாக பேசக் கூடிய நாயகர்கள்னு ஒரு இமேஜ் உண்டு. அதனால இவர்களுக்கு பாடும்போது அதீத எச்சரிக்கையோடு, தமிழை தப்பா உச்சரிக்க ஒத்துக்கவே மாட்டாங்க.. ஆனா இன்னிக்கு ஹீரோவுக்கு தமிழ் தெரியாது.. இசையமைப்பாளருக்கு அதப் பத்தி கவலையே கெடையாது..இதுபோக பாடலாசிரியருக்கும் உக்காந்து திருத்துற அளவுக்கு சுதந்திரமோ அல்லது ஸ்கோப்போ கெடையாது... அப்டியே சொன்னாலும், விடுங்க சார் டிரெண்டியா இருக்குன்னு சொல்லிருவாங்க..

இதப் படிக்கிற ஒருசிலருக்கு தோணலாம்.. என்னவோ வெளி ஆளுங்கள சொல்றியே, தாய்மொழி தமிழா இருக்கிற சில ஆளுங்களே ஒழுங்கா உச்சரிக்கிறதில்லைன்னு...

100% நிஜம் தான்.. ரொம்ப Strict வாத்தியார் இளையராஜாவ பக்கத்துல வச்சுகிட்டே.. "சின்ன கன்னன் அளைக்கிறான்"னு "", "", "", "" எல்லாத்தையும் கலந்துகட்டி 2006 concert யுவன் சங்கர் ராஜா பாடின பாவத்துக்கு பரிகாரம் பண்ண, அடுத்த concert பாலமுரளி கிருஷ்ணாவையே அழைச்சிட்டு வந்து பாடவைக்க வேண்டியதா ஆயிடுச்சு...

ஒரு நண்பர்கிட்ட பேசிகிட்டு இருந்தப்போ "சினேகிதனே சினேகிதனே" பாட்டுக்கு முன்னால "தொகையறா" ஒண்ணு வருமே தெரியுமான்னு கேட்டேன்.. அவரு சட்டுனு " தெரியுமே.. நேட்ரு உன்னி ராவில் உன்னி திலப்பு மடியே..."ன்னு பாட ஆரம்பிச்சாரு.. உன் தமிழறிவுல தீய வைக்க...அது ராவுல உன்னியும் இல்ல பகல்ல உன்னியும் இல்ல.. இது வைரமுத்துவோட "பெய்யெனப் பெய்யும் மழை" வந்த ஒரு கவிதைன்னு சொல்லிட்டு அவருக்கு அந்தக் கவிதைய சொன்னேன்..

நேற்று முன்னிரவில்
உன் நித்திலப் பூமடியில் (நித்திலம்னா முத்துன்னு அர்த்தம்)
காற்று நுழைவதுபோல்
மனம் கலந்து களித்திருந்தேன்...

இன்று பின்னிரவில்
அந்த ஈர நினைவுகளில்
கன்று தவிப்பதுபோல்
மனம் கலங்கிப் புலம்புகிறேன்..

கூந்தல் நெளிவுகளில் - எழில்
கோலச் சரிவுகளில்
காந்த அசைவுகளில்
என் கர்வம் அழிந்ததடி...

இந்தப் பாட்ட பாடுனவரும் ஒரு பச்சைத் தமிழர் தான்..இப்படி பாடுனா கர்வம் மட்டுமில்ல ஏன் தமிழும் சேந்து அழியாது..

அதுசரி.. நமக்கென்ன.. படம் ஓடுனா சரி தான்..   
ஏத்தோ சவ்க்கியம் பருவா இல்லை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!